ஜெய்ஸ்வால் வீக்னஸ கண்டுபிடிச்சிட்டாங்க.. அவர் பெரிய தப்பு பண்றாரு இனி கஷ்டம் – ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
125
Jaiswal

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக் கொள்ளும் எலிமினேட்டர் போட்டி தற்பொழுது குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த இரு அணிகள் பற்றியும் ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரை பொறுத்தவரையிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் 8 போட்டிகளில் 7 போட்டிகளை வென்றது. அதற்கு அடுத்த ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகளை தோற்று ஒரு போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தது.

- Advertisement -

அதே ஆர்சிபி அணி தங்களது முதல் 8 ஆட்டத்தில் ஏழு ஆட்டங்களை தோற்றது. ஆனால் கடைசி ஆறு ஆட்டங்களையும் தொடர்ந்து வென்றது.இதன் காரணமாக அந்த அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றில் நுழைந்திருக்கிறது.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “ராஜஸ்தான் அணியில் நிறைய பிரச்சனைகள் இருப்பதால் என்ன சொல்வது என்று தெரியவில்லை. கடந்த முறை ஆர்சிபி அணிக்கு எதிராக பட்லர் சதம் அடித்து வின்னிங் ஷாட்டையும் அடித்தார். அப்படிப்பட்ட ஒருவர் தற்போது இல்லாமல் ராஜஸ்தான் அணி விளையாட இருக்கிறது.

ஜெய்ஸ்வாலை பொறுத்தவரை அவருக்கு இது மிகவும் சுமாரான சீசன். அவர் பந்தை மிகவும் வேகமாக அடிக்க முயற்சி செய்து ஆட்டம் இழக்கிறார். மேலும் அவர் ஷார்ட் பந்துகளுக்கும், இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துக்கும் தடுமாறுகிறார். எனவே இன்று அவருக்கு இப்படித்தான் வியூகம் அமைக்கப்படும்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் 2024: கோடியில் சம்பளம்.. ஒரு போட்டியில் கூட ஆடல.. 2 அதிர்ஷ்ட சிஎஸ்கே வீரர்கள்

சஞ்சு சாம்சன் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். ரியான் பராக் ஃபார்ம் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கூட அவர் 500 ரன்களை தாண்டி இருக்கிறார். அதனால் அவருக்கு இது திருப்புமுனை சீசன் ஆக இருக்கிறது. மேலும் இந்த போட்டியில் ஹெட்மயர் விளையாடுவார்” எனக் கேள்விப்பட்டேன்.