ஐபிஎல் 2024: கோடியில் சம்பளம்.. ஒரு போட்டியில் கூட ஆடல.. 2 அதிர்ஷ்ட சிஎஸ்கே வீரர்கள்

0
67

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூர் அணி நிர்ணயித்த 218 ரன்களில் 200 ரன்கள் குவித்து இருந்தால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும். பெங்களூர் அணியின் கடைசி ஓவரை யாஷ் தயாள் சிறப்பாக வீசி வெற்றியை சென்னை அணியிடம் இருந்து பறித்து விட்டார். சிஎஸ்கேவில் இந்த சீசனில் பல வீரர்கள் காயம் அடைந்து வெளியேறியதால் அணியில் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்ட சில வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

- Advertisement -

இந்த சீசனில் பெஞ்சில் அமர வைக்கப்பட்ட வீரர்களான முகேஷ் சௌத்ரி மற்றும் சிமர்ஜீத் சிங் ஆகியோர் கூட முன்னணி வீரர்கள் காயம் அடைந்த சூழ்நிலையில் வாய்ப்பு பெற்று விளையாடினர். ஆனால் இக்கட்டான சூழ்நிலையில் கூட ஒரு கோடிக்கு மேல் விலை கொடுத்து வாங்கப்பட்ட இரண்டு வீரர்கள் சென்னை அணியில் விளையாட வாய்ப்பு தரப்படவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த வருடத்தின் இறுதியில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளதால் சென்னை அணி புத்திசாலித்தனமாக வீரர்களை வாங்க வேண்டும். மேலும் மகேந்திர சிங் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. எனவே இதனை கருத்தில் கொண்டு அணி வீரர்கள் வாங்குவதில் சென்னை அணியை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு கோடிக்கு மேல் விலை கொடுத்து வாங்கப்பட்ட போதிலும் சென்னை அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காத இரண்டு வீரர்கள் குறித்து காண்போம். இவர்கள் இருவரும் இந்திய வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்து நடைபெற உள்ள இடத்தில் இவர்களை சென்னை அணி திரும்ப எடுக்குமா? அல்லது விடுவிக்குமா? என்பது தெரியவில்லை.

- Advertisement -

1.பிரசாந்த் சோலங்கி: 2022 ஆம் ஆண்டு இந்திய லெக் ஸ்பின்னரான பிரசாந்த் சோளங்கியை 1.2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது. அந்த ஆண்டு இரண்டு போட்டிகளில் விளையாடினார். 2023ஆம் ஆண்டு இவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. திறமையான லெக் ஸ்பின்னரான இவர், இந்த சீசனிலும் அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காதது வருந்தத்தக்க செயலாகும்.

இதையும் படிங்க: கம்பீர் நிச்சயம் ஆர்சிபியை பைனல்ல விரும்ப மாட்டார்.. அதுக்கு முக்கிய காரணம் இதுதான் – வருண் ஆரோன் பேட்டி

2.ராஜ்வர்தன் ஹங்கர்கேர்: இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு வேகப்பந்து ஆல்ரவுண்டர் ராஜ்வர்தன் ஹங்கர்கேர் 2022ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை 1.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடினார். ஆனால் அதற்குப் பிறகு இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சென்னை நிர்வாகம் இவரை ஏலத்தில் தக்க வைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.