“தம்பிக்கு காயம் இல்ல.. வேண்டாம்னு சொல்லி வெளியே அனுப்பிட்டாங்க” – ஸ்ரேயாஸ் பற்றி ஆகாஷ் சோப்ரா கருத்து

0
64
Shreyas

இங்கிலாந்து அணிக்கு எதிராக எஞ்சி இருக்கும் மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கிடைக்கவில்லை.

மேலும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடுப்பு பகுதியில் காயம் இருக்கின்ற காரணத்தினால் அவர் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து வெளியேறுகிறார் என்று கூறப்பட்டது.

- Advertisement -

மேலும் அவர் கடந்த 13 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்டில் நான்கு இன்னிங்ஸ்களில் 26 ரன் சராசரியில் மட்டுமே அவர் விளையாடியிருந்தார்.

எனவே இப்படியான காரணங்களால் அவருக்கு காயம் இல்லை என்றாலும் கூட நீக்கப்பட்டு இருப்பார் என்று சமூகவலைதளங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “மொத்தம் மூன்று போட்டிகள் இருப்பதால் ஸ்ரேயாஸ் ஐயரும் தேர்வில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. காயத்தால் அவர் ஒரு போட்டிக்கு கிடைக்காமல் இருந்தால் கூட மீதி இரண்டு போட்டிகளுக்கு கிடைத்திருக்கலாம். அதனால் அவர் தேர்வுக்கு வந்திருக்கிறார்.

- Advertisement -

இருப்பினும் தேர்வாளர்கள் அவரை தேர்வு செய்யப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் ஐயர் இருந்த அதே படகில்தான் கில்லும் இருந்தார். ஆனால் அவர் ஒருபோதும் மோசமாக தோன்றவில்லை. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயரை பற்றி மக்கள் நிறைய விமர்சித்தார்கள். அதில் உண்மையும் இருந்தது.

விசாகப்பட்டினம் போட்டியில் ஒவ்வொரு ஷார்ட் பந்திலும் அவர் பின்வாங்கிக்கொண்டே இருந்தார். அது பார்ப்பதற்கு நன்றாக இல்லை. இவர் இப்படி தொடர்ந்து விளையாடினால் இது குறித்து கேள்விகள் நிச்சயம் வரும்.

இதையும் படிங்க : “U19 WC பைனல்.. ஆஸியை நேர்ல பார்த்து திட்டம் ரெடியா இருக்கு.. கவலைப்படாதிங்க” – இந்திய கேப்டன் பேச்சு

ஸ்ரேயாஸ் ஐயர் உலகக் கோப்பையில் நன்றாக விளையாடினார். அவருக்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் ஷார்ட் பந்து விஷயத்தில் தன்னை சரி செய்து கொள்ளாவிட்டால், சிவப்புப்பந்தில் மீண்டும் மீண்டும் இது நடக்கும்” எனக் கூறியிருக்கிறார்.