“U19 WC பைனல்.. ஆஸியை நேர்ல பார்த்து திட்டம் ரெடியா இருக்கு.. கவலைப்படாதிங்க” – இந்திய கேப்டன் பேச்சு

0
70
Uday

இன்று தென் ஆப்பிரிக்காவில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி விளையாட இருக்கிறது.

இந்திய அணி அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராகவும், ஆஸ்திரேலியா அணி அரையிறுதியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் மிக நெருக்கமான போட்டியில் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கின்றன.

- Advertisement -

இதுவரையில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையின் இறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மூன்று முறை சந்தித்திருக்கின்றன. இந்த மூன்று முறையில் இந்தியா இரண்டு முறை வெற்றி பெற்று இருக்கிறது.

மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய விளையாடிய அரையிறுதி போட்டியை இந்திய வீரர்கள் பார்த்தார்கள். எனவே இன்றைய போட்டி குறித்து இந்திய கேப்டன் உதய் சகரனிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நாங்கள் மிகவும் நெருக்கமான ஒரு போட்டிக்கு தயாராகவே இருந்தோம். நாங்கள் அப்படி ஒரு போராட்டமான ஆட்டத்தில் விளையாடியது நல்லது. இப்பொழுது எங்களுடைய மிடில் ஆர்டர்கள் மற்றும் லோயர் ஆர்டர்கள் கடினமான சூழ்நிலையில் செயல்படும் அழுத்தத்தை எதிர்கொண்டு இருக்கிறார்கள். இவை நாங்கள் முன்னோக்கி செல்வதற்கான பாடங்கள்.

- Advertisement -

நாங்கள் இந்த விக்கெட்டுகளை பார்த்திருக்கிறோம். ஏற்கனவே இங்கு நாங்கள் விளையாடி இருக்கிறோம். இதைப் பற்றி எங்களுக்கு ஓரளவுக்கு தெரியும். எல்லா சவால்களையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

நாங்கள் இதை தனிப்பட்ட எந்த ஒரு போட்டியாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. இது எங்களுக்கு மற்றும் ஒரு போட்டி. எங்கள் வேறு ஏதாவது இருந்திருந்தால் அதற்கேற்றபடி விளையாடுவோம்.

இதையும் படிங்க : “டெஸ்ட் கிரிக்கெட் தனி ஆளா முன்னாடி கொண்டு போனார்.. அவருக்கே இப்ப இப்படி” – ஹர்பஜன் சிங் வருத்தம்

நாங்கள் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய ஆட்டத்தை பார்த்தோம். நல்ல நெருக்கமான ஒரு போட்டியாக அமைந்தது. போட்டிக்கென எங்களிடம் திட்டங்கள் இருக்கிறது. அவற்றை நாங்கள் களத்தில் செயல்படுத்துவோம்” எனக் கூறியிருக்கிறார்”