ரசிகர்களே ஏமாற வேண்டாம்.. சிஎஸ்கே டிஎன்ஏவில் இது கிடையாது.. வேற வழி இல்ல – மேத்யூ ஹைடன் பேச்சு

0
92
Hayden

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று லக்னோ அணிக்கு எதிராக அவர்களது சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணி மோத இருக்கிறது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை எதிர்பார்க்க வேண்டாம் என சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ஹைடன் கூறியிருக்கிறார்.

தற்போது சிஎஸ்கே அணி தான் விளையாடி இருக்கும் ஆறு போட்டிகளில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மட்டுமே வெற்றி பெற்றது. இதற்கடுத்து விளையாடி இருக்கும் ஐந்து போட்டிகளிலும் தோற்று புள்ளி பட்டியலில் தற்பொழுது பத்தாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே ரசிகர்களின் எதிர்பார்ப்பு

சிஎஸ்கே அணியில் தற்பொழுது பெரிய ஷாட் விளையாடக்கூடிய அளவில் பேட்டிங் யூனிட் இல்லை என்பது பெரிய பின்னடைவாக இருந்து வருகிறது. நியூசிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட் விளையாடி வரும் ரச்சின் ரவீந்திரா மற்றும் கான்வே போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் கூட தற்போது ஐபிஎல்லில் அதிரடியாக விளையாடும் நிலையில் இல்லை.

மேலும் சிஎஸ்கே அணிக்கு வாங்கப்பட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் ராகுல் திரிபாதி விஜய் சங்கர் மற்றும் தீபக் ஹூடா மூவருக்குமே சுத்தமாக பேட்டிங் டச் இல்லை. இதனால் இவர்களால் சிக்சர் மட்டும் இல்லாமல் பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. இதனால் சிஎஸ்கே அணி டி20 கிரிக்கெட் ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவது போல விளையாடி வருகிறது. எனவே மற்ற அணிகளில் இளம் வீரர்கள் ஜொலிப்பதை போல தங்கள் அணியிலும் இருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

- Advertisement -

மேத்யூ ஹைடன் கருத்து

இந்த நிலையில் இது குறித்து மேத்யூ ஹைடன் கூறும் பொழுது “சிஎஸ்கே வின் டிஎன்ஏவில் பெரிய மாற்றங்கள் எதுவுமே இருக்காது. அவர்களுடைய வழக்கம் என்னவென்றால் நிறைய மாற்றங்களை அணியில் எப்பொழுதும் செய்ய மாட்டார்கள். உங்களை நம்புங்கள் மீண்டும் செயல்முறைக்கு திரும்புங்கள் என்பதுதான் அவர்களுடைய வழக்கம். பவர் பிளேவில் 60 ரன்கள் எடுக்காத அணியாக இருந்தாலும், தற்போது அவர்கள் தற்போது வித்தியாசமான புள்ளியை கண்டுபிடிக்க வேண்டும்”

இதையும் படிங்க : ஹர்திக் வேண்டாம்.. ரோகித் சர்மாவை கேப்டனாக போடுங்க.. நீதா அம்பானியிடம் நேரில் கோரிக்கை வைத்த ரசிகர்

“அவர்கள் வழக்கம் போல் எந்த மாற்றங்களையும் செய்யாமல் தாங்கள் செய்வது தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும் பொழுது ரிசல்ட் வெவ்வேறு மாதிரியாக வந்து கொண்டிருக்கிறது. இவர்கள் இதை உணர்ந்து செய்கிறார்களா என்று தெளிவாக வேண்டும். மேலும் இவர்கள் தெளிவாக வேறு ஏதாவது வழியை கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -