“சர்பராஸ் கானை விட தம்பி முசிர் கான்தான் பெஸ்ட்” – இந்திய முன்னாள் ஓபனர் கருத்து

0
68
Sarfaraz

இந்திய கிரிக்கெட்டில் தற்போது கவனம் இருக்கக்கூடிய கிரிக்கெட் சகோதரர்களாக சப்ராஸ்கான் மற்றும் அவருடைய தம்பி முசிர் கான் இருவரும் தெரிகிறார்கள்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் அண்ணன் சர்பராஸ் கானுக்கு இடம் கிடைத்திருக்கிறது. ஆனால் இன்னும் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

அதே சமயத்தில் தம்பி முசிர் கான் இந்திய அண்டர் 19 அணியில் இடம் பிடித்து உலகக் கோப்பையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் இவர் மூன்றாம் இடத்தில் வரக்கூடிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக இருப்பதோடு, வலது கையில் பேட்டிங் செய்து இடது கையில் சுழற் பந்து வீச்சை வீசக்கூடியவராக இருக்கிறார்.

அதே சமயத்தில் பந்து வீச்சிலும் விக்கெட் கைப்பற்றுகிறார். மேலும் பேட்டிங்கில் நல்ல முறையில் ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடுகிறார். எனவே இவருக்கு எதிர்கால இந்திய கிரிக்கெட் அணியில் பெரிய இடம் காத்திருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” தங்களுடைய கிரிக்கெட் கேரியரை முடிக்கும் பொழுது அண்ணன் சர்ஃபாரஸ் கானை விட தம்பி முசிர் கான் முன்னணியில் இருப்பார் என்று நினைக்கிறேன். அவரிடம் இருக்கும் சிறப்பான விஷயம் என்னவென்றால் அவருக்கு பேட்டிங்கில் நல்ல டைமிங் இருக்கிறது.

அவர் தனது கால்களை பயன்படுத்தி நன்றாக விளையாடுகிறார். மேலும் நேராகவும் விளையாடுகிறார். அவருடைய பலத்தில் பந்து இருக்கும்போதெல்லாம் அவர் சிறப்பாக அதை விளையாடி விடுகிறார். மேலும் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நல்ல முறையில் விளையாடும் அவரிடம் மாடர்ன் கிரிக்கெட் ஷாட்களும் இருக்கிறது.

இதையும் படிங்க : “உங்க தோனி சிறந்தவர்.. ஆனா இங்கிலாந்து இந்த பிளேயர் தலைசிறந்தவர்” – அலெக் ஸ்டூவர்ட் பேச்சு

தற்போதைக்கு முசிர் கான் தன்னுடைய பேக் புட் விளையாட்டில் உழைப்பை கொடுக்க வேண்டும். அவர் இறுதிப் போட்டியில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து தப்பித்தார். அதே சமயத்தில் அதில் அரையிறுதியில் ஆட்டம் இழந்தார். அவர் ஷார்ட் பந்துகளுக்கு எதிராக விளையாடுவதில் முன்னேற்றம் காண வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.