“உங்க தோனி சிறந்தவர்.. ஆனா இங்கிலாந்து இந்த பிளேயர் தலைசிறந்தவர்” – அலெக் ஸ்டூவர்ட் பேச்சு

0
83
Dhoni

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்தியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நாளை குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் துவங்குகிறது.

இங்கிலாந்து அணி பாஸ் பால் முறையில் விளையாடும் வருகின்ற காரணத்தினால், இந்தியாவில் எப்படி விளையாடுவார்கள்? என்கின்ற எதிர்பார்ப்பு நிறைய இருந்தது. தற்பொழுது இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று இருப்பதால் தொடருக்கு இன்னும் சுவாரசியம் கூடியிருக்கிறது.

- Advertisement -

பொதுவாக இந்தியாவிற்கு டெஸ்ட் கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்யும் வெளிநாட்டு அணிகளுக்கு சுழல் பந்தை சமாளிப்பதில் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சிக்கல்கள் இருந்து வந்திருக்கிறது.

அதே சமயத்தில் வெளிநாட்டு விக்கெட் கீப்பர்கள் இந்தியாவில் பந்து நன்றாக சுழன்று திரும்பும் நிலையில் பந்தை பிடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார்கள். இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பித்து பெரிய ஸ்கோர்க்கு சென்ற நிகழ்வுகளும் இருக்கின்றன.

எனவே இந்தியாவில் விக்கெட் கீப்பிங் செய்வது மிகவும் சவாலானது. இதனால்தான் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் விக்கெட் கீப்பிங் செய்த கேஎல்ராகுல், இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் பற்றி இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், முன்னாள் விக்கெட் கீப்பருமான அலெக்ஸ் ஸ்டுவர்ட் வித்தியாசமான கருத்தை முன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “விக்கெட் கீப்பிங்கில் மகேந்திர சிங் தோனிக்கு நல்ல வேகமான கைகள் இருந்தது. ஆனால் தற்போதைய இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ்க்கு தோனியை விட மிக வேகமான விக்கெட் கீப்பிங் செயல்பாடு இருக்கிறது.

விக்கெட் கீப்பிங்கில் அவருக்கு இருக்கும் கையின் வேகம் யாருக்கும் இரண்டாவது இடத்தை பெறக்கூடியது கிடையாது. அவருக்கு இந்த திறமை மிக இயல்பாகவே அமைந்திருக்கிறது.

அதே சமயத்தில் அவர் பணி நெறிமுறை, டெக்னிக்கலுக்கு கொடுக்கும் கவனம், சர்ரே கிரிக்கெட் கிளப்பில் நான் இருந்த பொழுது அவரை நேரடியாகவே பார்த்திருக்கிறேன். அவர் எது ஒன்றையும் விட்டு வைத்தது கிடையாது. சிறப்பு விஷயங்கள் மற்றும் தரத்தில் எப்பொழுதும் வேலை செய்து கொண்டே இருப்பார்.

இதையும் படிங்க : 3வது டெஸ்ட்.. மழை பாதிப்பு இருக்கிறதா?.. ஆடுகளம் மற்றும் மைதான புள்ளி விபரங்கள்.. முழு தகவல்கள்

இறுதியாக இந்தியாவில் அவர் தற்போது பிடித்திருக்கும் சில கேட்ச்கள் அவரது திறமைக்கான நல்ல உதாரணமாகவும் வெகுமதியாகவும் அமைந்திருக்கிறது. அவரது விக்கெட் கீப்பிங் நிலை எப்படி இருக்கிறது என்று விவாதிக்க வேண்டிய நேரம் இது” எனக் கூறியிருக்கிறார்.