2024 டி20 உலககோப்பை.. இந்திய செலக்டர்களை மயங்க் யாதவ் விடமாட்டார் – இந்திய முன்னாள் வீரர் பேச்சு

0
368
Mayank

இந்தியாவில் தற்பொழுது 17வது ஐபிஎல் சீசன் நடைபெற்று வருகிறது. மே மாதம் 20ஆம் தேதி ஐபிஎல் சீசன் முடிவடைய, ஜூன் மாதம் 5ஆம் தேதி வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடர்நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிப்பு இந்த மாதம் ஏப்ரல் இறுதியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும், டெல்லியைச் சேர்ந்த 21 வயதான வலதுகை இளம் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் அனைவர் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார். இதன் காரணமாக அவர் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக இந்த சீசனில் அறிமுகமான மயங்க் யாதவ் அதிவேகமான பந்துவீச்சில் அசத்தி 27 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இதேபோல நேற்று ஆர்சிபி அணிக்கு எதிராகவும், 4 ஓவர்களுக்கு 14 ரன்கள் மட்டும் தந்து, மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக 155.8 கிமீ, ஆர்சிபி அணிக்கு எதிராக 156.6 கிமீ என அதிவேகப்பந்துவீச்சை பதிவு செய்திருக்கிறார். அவரிடம் வேகம் அதிகமாக இருந்த போதிலும் கூட, அவரது பந்துவீச்சு கட்டுப்பாடு சிறப்பாக இருக்கிறது. மேலும் அவரது பந்து வீச்சில் துல்லியமும் சிறப்பாக இருக்கிறது. இதன் காரணமாகவே அவர் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “மயங்க் யாதவின் வேகம் இன்னொரு முறை மீண்டும் எதிரணியை கைது செய்து இடித்தது. கடந்த போட்டியில் 155.8 கிலோமீட்டர் வேகத்தில் வீசி இருந்தவர், இந்த போட்டியில் அதை தாண்டி 156.6 கிலோமீட்டர் வேகத்தில் வீசி இருக்கிறார். இவர் பர்பில் தொப்பிக்கான போட்டியில் மிகவும் சவால் கொடுக்கக் கூடியவராக வருவார். மேலும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் இவர் தேர்வு செய்யப்படாவிட்டாலும் கூட, இவர் பெயரை நிச்சயம் தேர்வாளர்களை பரிசீலனை செய்ய வைக்கும் அளவுக்கு கட்டாயப்படுத்துவார்.

- Advertisement -

இதையும் படிங்க : பாகிஸ்தான் தொடருக்கான நியூசி அணி அறிவிப்பு.. முன்னாள் ஆர்சிபி வீரர் கேப்டன்.. இடம்பெறாத 9 ஐபிஎல் வீரர்கள்

இந்த மைதானத்தில் முக்கிய மூன்று விக்கெட்டுகளை எடுத்ததோடு ரன்களும் கொடுக்காமல் இருந்தார். இதன் காரணமாக போட்டியை 16 ஓவர் கொண்ட போட்டியாக மாற்றிவிட்டார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக வீசப்பட்ட பந்துகளின் பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் ஒரு பந்தையும் வீசி இருக்கிறார். முதலில் மேக்ஸ்வெல்லை வெளியேற்றினார். இதற்கு அடுத்து கேமரூன் கிரீனை அவர் அவுட் செய்த பந்துதான் போட்டியின் பந்தாகவே இருந்தது” என்று கூறியிருக்கிறார்.