பாகிஸ்தான் தொடருக்கான நியூசி அணி அறிவிப்பு.. முன்னாள் ஆர்சிபி வீரர் கேப்டன்.. இடம்பெறாத 9 ஐபிஎல் வீரர்கள்

0
759

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வருகிற ஏப்ரல் 18-ஆம் தேதி பங்கேற்க உள்ளது. இதற்கான பதினைந்து பேர் கொண்ட அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது அறிவித்துள்ளது.

வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி முதல் டி20 உலக கோப்பை தொடர் தொடங்க உள்ளதால் அதற்காக அனைத்து அணிகளும் தற்போது மிகத் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாகிஸ்தான் அணியும் இதற்கு முன்னர் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் வேகப்பந்துவீச்சாளர் சாகின் சா அப்ரிடி தலைமையில் சென்ற பாகிஸ்தான் அணி மண்ணை கவியது.

- Advertisement -

இதனால் வலுவான பாகிஸ்தான் அணியை உருவாக்க நினைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது பாபர் ஆசாமை கேட்டனாக நியமித்து களமிறக்கியுள்ளது. அதேபோல நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும் டி20 உலககோப்பைக்கு தயாராகும் விதமாக இந்த டி20 தொடரில் விளையாடுகிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் வழக்கமாக நியூசிலாந்து அணியில் விளையாடும் ரச்சின் ரவீந்திரா, ட்ரெண்ட் போல்ட், கான்வே, லாக்கி பெர்குசன், கேன் வில்லியம்சன், மாட் ஹென்றி, டாரி மிச்சல், கிளின் பிலிப்ஸ் மற்றும் ஹென்றிக் கிளாஸன் ஆகியோர் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருவதால் அவர்கள் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் இளம் வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணிக்கு ஆல் ரவுண்டர் மிச்சல் பிரேஸ்வெல்லை கேப்டனாக நியமித்து ஆச்சரியம் அளித்திருக்கிறது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்.

ஏனெனில் பிரேஸ்வெல் காயம் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சர்வதேச போட்டிகள் எதிலும் களமிறங்கவில்லை. பிறகு காயத்திலிருந்து முழுவதுமாக குணமாகி சமீபத்தில்தான் நியூசிலாந்து அணிக்கு திரும்பி இருக்கிறார். இதுகுறித்து நியூசிலாந்து அணியின் தேர்வுக்குழு தலைவர் சாம்வேல்ஸ் கூறுகையில்

- Advertisement -

“பிரேஸ் வெல் கடினமான காலத்தை எதிர்கொண்டு தற்போது அணிக்கு திரும்பி இருப்பதில் மீண்டும் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது அவர் மீண்டும் அணிக்கு திரும்பி சிறப்பாக விளையாடுவது அவரது கடின உழைப்புக்கு கிடைத்த ஒரு சான்றாகும். பிரேஸ்வெல் ஏற்கனவே நியூசிலாந்து ஏ மற்றும் நியூசிலாந்து 11 அணிகளுக்கு தலைமை தாங்கிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் அவரது தலைமை சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியிருக்கிறார். பிரேஸ்வெல் முன்னாள் ஆர்சிபி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாகிஸ்தான் பிஎஸ்எல் பரிசு தொகை.. இந்திய மகளிர் டி20 லீக் பரிசு தொகையை விட குறைவு.. முழு விவரங்கள்

பாகிஸ்தானுக்கான நியூசிலாந்து அணி: மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்), ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டஃபி, டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், பென் லிஸ்டர், கோல் மெக்கன்சி, ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், வில் ஓ’ரூர்க், டிம் ராபின்சன், பென் சியர்ஸ், டிம் சீஃபர்ட், இஷ் சோதி

சுற்றுப்பயண அட்டவணை:

முதல் டி20: ஏப்ரல் 18, ராவல்பிண்டி

இரண்டாவது டி20ஐ: ஏப்ரல் 20, ராவல்பிண்டி

மூன்றாவது டி20: ஏப்ரல் 21, ராவல்பிண்டி

நான்காவது டி20: ஏப்ரல் 25, லாகூர்

ஐந்தாவது T20I: ஏப்ரல் 27, லாகூர்