ரோகித் சர்மா இஷான் கிஷான் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு தர மாட்டேன் என சொன்னாரா? – இந்திய முன்னாள் வீரர் விளக்கம்

0
260
Rohit

இந்திய கிரிக்கெட்டில் தற்போது பிரபல வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடுவது தொடர்பான விவகாரம் பெரிய பிரச்சினையாக மாறிக் கொண்டு வருகிறது.

இந்திய அணிக்கு தேர்வாகாத மற்றும் காயமடையாத வீரர்கள் எல்லோருமே இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாட வேண்டும் என பிசிசிஐ மிகக் கண்டிப்பாக தெரிவித்து இருக்கிறது.

- Advertisement -

மேலும் இப்படி பங்கேற்காத வீரர்கள் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் மேலும் சம்பள ஒப்பந்தத்தில் இருந்தால் நீக்கப்படுவார்கள் என்பது போன்ற எச்சரிக்கை அறிவிப்புகளும் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்பொழுது “டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் கடினமான வடிவம். இதில் விளையாட வேண்டும் என்றால் பசி இருக்க வேண்டும். பசி இல்லாத வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டோம்” என்று கூறியிருந்தார்.

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் வெளியேறிய இசான் கிஷான் உள்நாட்டு தொடருக்கு திரும்பவில்லை. இதேபோல் இந்திய அணியில் இருந்து விலக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கு ரஞ்சி கால் இறுதி விளையாட வில்லை. இவர்களைத்தான் ரோஹித் சர்மா கூறியிருக்கிறார் என்கின்ற பேச்சு பரவியது.

- Advertisement -

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் கடினமான வடிவம் என்றும், இதில் வெற்றி பெற அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கம் தேவை என்றும், யாருக்காவது இதில் விளையாடுவதற்கான பசி இல்லை என்றால் வாய்ப்பு தரப்படாது என்று கூறி இருக்கிறார். ஆனால் யாரையும் குறி வைத்துப் பேசவில்லை.

அந்த பேட்டியில் அவர் பேசுவதை நீங்கள் முழுவதுமாக கேட்டால், இந்திய அணிக்கு உள்ளேயோ அல்லது வெளியையோ யாரும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட மாட்டேன் என்று நினைப்பதாக கூறவில்லை. எனவே இதிலிருந்து அவர் யாரையும் சுட்டிக்காட்டி பேசவில்லை என்பது புரிகிறது.

இதையும் படிங்க : “இது சத்தியம்.. தோனி அடைந்த உயரங்களை துருவ் ஜுரல் அடைவார்.. இதான் காரணம்” – அனில் கும்ப்ளே உறுதி

இங்கிலாந்து கேப்டன் தமக்கு இங்கு எந்த வாய்ப்புகள் இல்லை என்றாலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக பேசியிருக்கிறார். மேலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடுவதுதான் பாஸ்பால் எனவும் கூறியிருக்கிறார். அப்பொழுது எல்லாமே பாஸ்பால்தானா? மேலும் ஆங்கில ஊடகங்கள்தான் இதை மிகைப்படுத்தி இப்படி செய்து வைத்திருக்கின்றன” என்று கூறி இருக்கிறார்.