“இது சத்தியம்.. தோனி அடைந்த உயரங்களை துருவ் ஜுரல் அடைவார்.. இதான் காரணம்” – அனில் கும்ப்ளே உறுதி

0
94
Jurel

இங்கிலாந்து அணிக்கு எதிராக நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற முடிந்த பிறகு, இந்திய அணியின் 22 வயதான இளம் வலது கை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் துருவ் ஜுரல் பலரது கவனத்தையும் ஈர்ப்பவராக மாறியிருக்கிறார்.

இஷான் கிஷான் தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடரில் மனசோர்வு காரணமாக வெளியேறிய காரணத்தினால், அவரை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய தேர்வுக்குழு அதிரடியாக பரிசீலிக்கவில்லை.

- Advertisement -

இதனால் மிக தைரியமாக 15 முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்ற துருவ் ஜுர்லை தேர்ந்தெடுத்தார்கள். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு பெற்ற விக்கெட் கீப்பர் கேஎஸ்.பரத் ஆட்டம் இழந்த முறை மிகவும் கவலை அளிப்பதாக இருந்தது. எனவே மேற்கொண்டு அவருக்கு ஒரு வாய்ப்பை தராமல் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் துருவ் ஜுரலை விளையாட வைத்தார்கள்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய துருவ் ஜுரல் அஸ்வின் உடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து 46 ரன்கள் எடுத்தார். இரண்டாவது டெஸ்டில் மிக முக்கியமான இரண்டு இன்னிங்ஸ்களிலும் 90 மற்றும் 39* ரன் என எடுத்தார். இவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

மேலும் இவர் ஆட்டத்தின் சூழலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற முறையில் விளையாடுவதும், விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்படுவதையும் பார்த்து, இந்திய லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் இவரை அடுத்த மகேந்திர சிங் தோனி என்று கூறியிருந்தார். தற்பொழுது இதையே அனில் கும்ப்ளேவும் கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ரிஷப் பண்ட் கட்டாயம் இருக்கிறார். ஆனால் அவர் எப்பொழுது வருவார் என்று தெரியாது. சீக்கிரம் வருவார் என்று நம்புகிறேன். ஆனால் மகேந்திர சிங் தோனி அடைந்த உயரங்களை துருவ் ஜுரல் அடைய முடியும் என நான் உறுதியாக நினைக்கிறேன்.

அவர் பேட்டிங்கில் தற்காப்பாக விளையாடுவதில் மட்டும் டெக்னிக்கை காட்டவில்லை. அதிரடியாக விளையாடும் பொழுது கூட சிறப்பாக விளையாடினார். கடைசி கட்ட பேட்ஸ்மேன்னுடன் இணைந்து ரன்கள் கொண்டு வந்தார். அந்த நேரத்தில் பெரிய சிக்ஸர்கள் அடித்தார். சுழல் பந்துவீச்சு வேகப்பந்துவீச்சாளர்கள் என இருவரையும் சிறப்பாக சமாளித்தார்.

இது மட்டும் இல்லாமல் அவர் விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக இருக்கிறார். சூழல் வேகம் என இரண்டிலும் அவர் பின்னால் இருந்து நல்ல முறையில் செயல்படுகிறார்.

இதையும் படிங்க : “தோனி கிடையாது.. இவருக்குத்தான் என் மகன் பெரிய ரசிகன்.. நான்தான் கோச்” – சுரேஷ் ரெய்னா தகவல்

தற்பொழுது அவர் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் பொழுது, அவர் இன்னும் நிறைய முன்னேற்றம் காண்பதற்கான வீரராக இருக்கிறார். அவர் இந்திய அணிக்கு ஒரு விதிவிலக்கான வீரராக இருப்பார் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -