சிஎஸ்கேவுக்கு நடந்த அதே சோகம்.. மும்பை இந்தியன்ஸ்க்கும் அப்படியே நடந்த துரதிஷ்டம்

0
367
CSK

தற்போது இலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் காயம் காரணமாக இலங்கை மற்றும் சிஎஸ்கே வீரர் பதிரனா விளையாடவில்லை.

அவருக்கு காயம் உறுதி செய்யப்பட்ட நிலையில் மேற்கொண்டு நடந்து கொண்டிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில்அவரை அணி நிர்வாகம் சேர்க்கவில்லை. தற்பொழுது ஓய்வில் இருந்து வரும் அவர் முதல் பாதி ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே அணிக்கு கிடைக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரைப் போலவே பந்து வீசும் அதே இலங்கையைச் சேர்ந்த 17 வயது இளம் வீரர் ஒருவரை மகேந்திர சிங் டோனி அழைத்து வரக்கூறி, தற்பொழுது அந்த இளம் வீரர் சென்னை அணியுடன் இணைந்து இருக்கிறார். இவர் ஆரம்பத்தில் சென்னை அணிக்கு வலைப்பயிற்சியில் பந்து வீசுவார். மேற்கொண்டு பதிரனா காயம் குணமடையவில்லை என்றால் இந்த சீசனில் அவர் சிஎஸ்கே அணியில் சேர்க்கப்படலாம்.

சிஎஸ்கேவுக்கு நடந்த அதே சோகம்:

தற்பொழுது இலங்கை அணியின் இதே பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது ஆறு ஓவர்கள் மட்டுமே பந்து வீசி இருந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் தில்சன் மதுசங்கா இரண்டு விக்கெட் கைப்பற்றி வெளியேறியிருந்தார்.

அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக எஞ்சியுள்ள கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும், இதற்கு அடுத்து நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலும் ரூல்டு அவுட் செய்யப்படுகிறார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறி இருக்கிறது.

- Advertisement -

இவர் நடந்து முடிந்த மினி ஏலத்தில் 4.6 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். புதிய பந்தில் ஸ்விங் மற்றும் கட்டர்கள் வீசுவதில் சிறந்தவராக இருக்கிறார். இப்போது இலங்கை கிரிக்கெட்டின் சிறந்த தலைமை வேகப்பந்துவீச்சாளர் இவர்தான். எனவே மும்பை அணிக்கு இவர் இல்லாதது ஒரு இழப்புதான்.

இதையும் படிங்க : 50-4.. என்னையவா ஒதுக்குன.. பாபர் அசாம் டீமை பைனலுக்கு வெளியே அனுப்பிய வீரர்

ஐபிஎல் தொடரின் இரண்டு பெ ரிய அணிகளான சிஎஸ்கேவுக்கு பங்களாதேஷ் தொடரில் காயம் அடைந்த இலங்கை வேகப் பந்துவீச்சாளர் மதிஷா பதிரனா கிடைக்கவில்லை. தற்பொழுது இதே பங்களாதேஷ் தொடரில் இருந்து இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் தில்சன் மதுசங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைக்கவில்லை. இரண்டு அணிகளுக்கும் ஒரே நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஒரே தொடரில் காயம் அடைந்து கிடைக்காமல் போவது சோகமான விஷயமாக அமைந்திருக்கிறது.