இந்த வருஷம் மும்பை இந்தியன்ஸ் போட்டிகளை பாதி மட்டும்தான் பார்த்தேன்.. மீண்டு வந்தது இப்படித்தான் – சூரியகுமார் பேட்டி

0
8
Surya

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. மேலும் கேப்டன் பொறுப்பில் ரோகித் சர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியாவை கொண்டு வந்திருந்ததும் பெரிய சச்சரவுகளை உருவாக்கியிருந்தது. இந்த நிலையில் காயத்தில் இருந்து தான் எப்படி விரைவாக மீண்டு வந்தேன் என்பது குறித்து மும்பை இந்தியன்ஸ் வீரர் சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.

சூரியகுமார் யாதவ் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் விளையாட வில்லை. அவர் குடலிறக்கத்திற்கு அறுவை சிகிச்சை செய்து, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயம் குணமாவதற்காக மறுவாழ்வில் இருந்து வந்தார். இந்த காலகட்டத்தில் அவர் எப்படி உணர்ந்தார்? மறுவாழ்வில் சீக்கிரம் எப்படி குணமடைந்தார்? என்பது குறித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது “நான் மறுவாழ்வு காலத்தில் சீக்கிரம் தூங்குவது, உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடாக இருப்பது போன்ற விஷயங்களை தொடர்ந்து பின்பற்றினேன். நான் என்னுடைய வாழ்நாளில் ஒரு புத்தகங்கள் கூட படித்தது கிடையாது. அந்த நேரத்தில் அதையும் செய்ய ஆரம்பித்தேன். என் உடல் மூளை இரண்டையும் மறுவாழ்வில் செலுத்தியதால்தான் என்னால் மிக விரைவாக குணமடைந்து வர முடிந்தது.

நான் எப்படி திரும்பி வர வேண்டும் என்பது குறித்து நான் முடிவு செய்ய வேண்டியதாகவும் இருந்தது. குறித்து எனது மனைவி மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்தவர்கள், நான் புதிய வெர்ஷனில் வரவேண்டும் என்று விரும்பினார்கள். நான் திரும்பி வந்த பொழுது களத்தில் வித்தியாசமாக உணர்கிறேன்.

உங்களுடைய அணி விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, நீங்கள் அறையில் உட்கார்ந்து அதை பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் கடினமானது. ஆனால் நான் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியதை பார்க்கவில்லை என்று கூற முடியாது. நான் சரியான நேரத்திற்கு தூங்க வேண்டும் என்பதற்காக இரவு 10:30 மணிக்கு தூங்கி விடுவேன். இதன் காரணமாக நான் பாதி போட்டியை மட்டுமே பார்ப்பேன்.

- Advertisement -

அதே சமயத்தில் நான் காலையில் எழுந்து போட்டியை மொத்தமாக ஹைலைட்ஸில் முழுதாக பார்ப்பேன். ஆனால் அவர்கள் விளையாடுவதை பார்த்து நானும் சீக்கிரம் சென்று விளையாட வேண்டும் என்கின்ற ஊக்கத்தையும் உத்வேகத்தையும் கொடுத்துக் கொண்டேன். நான் வேகமாக குணமடைந்து அங்கிருந்து வெளியேறி வந்து அணி உடன் இணைந்தேன்” என்று கூறி இருக்கிறார்.