21 டெஸ்ட்கள்.. இந்திய அணி சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த இங்கிலாந்து .. காப்பாற்றிய போப்

0
332
England

இங்கிலாந்து அணி தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இந்தத் தொடரின் முதல் போட்டி இரண்டு நாட்களுக்கு முன் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளில் ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியும் சேர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டை எந்த சூழ்நிலையிலும் அதிரடியாக மட்டுமே அணுகி, பார்ப்பவர்களை பரவசப்படுத்தி வந்திருக்கிறது.

எனவே சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான இந்திய சூழ்நிலையில் இங்கிலாந்து என்ன செய்யும் என்கின்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் முதல் இன்னிங்சில் 246 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது இங்கிலாந்து அணி.

இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக விளையாடிய 436 ரன்கள் குவித்தது. மேலும் 190 ரன்கள் முன்னிலையும் பெற்றது. எனவே இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்ற சூழ்நிலை இருந்தது.

- Advertisement -

இப்படியான நிலையில் களம் இறங்கி விளையாடிய இங்கிலாந்து அணி 200 ரண்களைக் கடந்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்து, தற்பொழுது ஐந்து விக்கெட் இழப்புக்கு 250 ரன்களையும் கடந்து முன்னிலை பெற்று இருக்கிறது. இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் போப் 154 பந்துகளில் 10 பவுண்டரிகள் உடன் சதம் அடித்து விளையாடி வருகிறார்.

இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் வந்த அணிகள் விளையாடிய கடைசி 21 டெஸ்ட் போட்டிகளில், எந்த அணியும் இதுவரையில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 200 ரன்களை கடந்ததில்லை. அந்த அளவிற்கு பேட்டிங் செய்வது இந்திய சூழ்நிலையில் அவர்களுக்கு கடினமாக இருந்திருக்கிறது.

இதையும் படிங்க : “அஸ்வின் ஜடேஜாகிட்ட.. பேட்ஸ்மேன்கள் மூச்சே விட முடியாது” – லெஜன்ட் கும்ப்ளே பெரிய பாராட்டு

தற்பொழுது இங்கிலாந்து அணி இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 200 ரன்கள் தாண்டி, இந்தியாவின் வித்தியாசமான 21 டெஸ்ட் போட்டிகள் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. மேலும் இந்த போட்டி கொஞ்சம் கொஞ்சமாக நான்காவது நாளுக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.