“அஸ்வின் ஜடேஜாகிட்ட.. பேட்ஸ்மேன்கள் மூச்சே விட முடியாது” – லெஜன்ட் கும்ப்ளே பெரிய பாராட்டு

0
100
Kumble

தற்போது டெஸ்ட் கிரிக்கெட் உலகத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் மிகச் சிறந்த சூழல் கூட்டணியாக இருக்கிறார்கள்.

இந்திய கிரிக்கெட்டில் இவர்களுக்கு முன்னால் லெஜெண்ட் அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் இருந்தார்கள். இவர்கள் இருவரும் ஏற்படுத்திய தாக்கத்தை விட இந்த ஜோடி பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூற வேண்டும்.

- Advertisement -

காரணம் இவர்கள் இருவருமே பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள். ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து சர்வதேச டெஸ்ட் சதங்கள் மற்றும் ரவீந்திர ஜடேஜா இரண்டு சர்வதேச டெஸ்ட் சதங்கள் பேட்டிங்கில் எடுத்திருக்கிறார்கள்.

மேலும் அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஜோடி சேர்ந்து விளையாடி எடுத்த விக்கெட்டுகளை விட, இவர்கள் இருவரும் சேர்ந்து விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் தனிச் சாதனையை படைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தற்பொழுது நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலும் இவர்களது பந்துவீச்சு மற்றும் பேட்டிங் செயல்பாடு இந்திய அணிக்கு மிகப்பெரிய உதவியாக அமைந்திருக்கிறது.

இவர்கள் குறித்து பேசி உள்ள லெஜன்ட் அனில் கும்ப்ளே ” இந்த இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களும் சேர்ந்து விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து, தற்போது இவர்கள் சேர்ந்து விளையாடும் 41வது டெஸ்ட் போட்டியில் வரை அதே அழுத்தம் இருந்து கொண்டிருக்கிறது. இந்த அழுத்தத்தை தாண்டி இவர்கள் இருவரும் மேட்ச் வின்னிங் பெர்பார்மன்ஸ் செய்வது நம்ப முடியாத ஒன்று.

சில நேரங்களில் இருவரும் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்கள். முதலில் ஒருவர் ஐந்து விக்கெட் கைப்பற்றினால், இரண்டாவது ஒருவர் ஐந்து விக்கெட் கைப்பற்றுவார். இதைத்தொடர்ந்து 40 ஆட்டங்களில் செய்து, அதில் 30 ஆட்டங்களை வெல்வது என்பது நம்ப முடியாத மிகச்சிறப்பான செயல்பாடு.

இதையும் படிங்க : INDA vs ENGL.. இந்திய ஏ அணி இன்னிங்ஸ் வெற்றி.. இங்கிலாந்து லயன்ஸ் போராடி தோல்வி.. சர்பராஸ் கான் நாயகன்

இவர்கள் மிகவும் புத்திசாலிகள். மேலும் இவர்கள் வீசும் ஒரு பந்துக்கு கூட பேட்ஸ்மேன்கள் மூச்சுவிட்டு ரிலாக்ஸ் ஆக இருக்க முடியாது. ஏனென்றால் இவர்கள் இருவரும் தொடர்ந்து ஒவ்வொரு பந்திலும் உங்களிடம் மோதிக்கொண்டே இருப்பார்கள். இந்திய சூழ்நிலைகளில் இவர்கள் இருவரும் சேர்ந்து உங்களிடம் வந்து கொண்டே இருப்பதுதான், இந்த இரண்டு பந்துவீச்சாளர்களின் அழகு” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -