2023 அன்னைக்கும் நான் நைட் தூங்கல.. இன்னைக்கும் நான் தூங்க மாட்டேன்.. காரணம் இதுதான் – ரஷித் கான் நெகிழ்ச்சி கருத்து

0
342
Rashid

ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரின் இன்று ஆஸ்திரேலியா அணிக்கு ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி கொடுத்தது. இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை ஆப்கானிஸ்தான் அணி வென்றது. இந்த போட்டிக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏற்பட்ட தோல்வி குறித்து நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டிக்கான டாஸில் ஆப்கானிஸ்தான அணி தோல்வி அடைந்தது. ஆனால் அதுவே அவர்களுக்கு நல்லதாக மாறியது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் பேட்டிங் செய்ய கொஞ்சம் கடினமான ஆடுகளத்தில் 148 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதற்குப் பிறகு விளையாட வந்த ஆஸ்திரேலியா அணியில் எல்லா பேட்ஸ்மேன்களும் தடுமாறினார்கள். மேக்ஸ்வெல் மட்டும் நிலைத்து நின்று வழக்கம் போல் ஆப்கானிஸ்தான் அணிக்கு பயம் காட்டினார். மீண்டும் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவர் அடித்த இரட்டை சதம் ஞாபகத்திற்கு வந்தது. கையில் இருந்த வெற்றியை ஆப்கானிஸ்தான் அந்த போட்டியில் தவறவிட்டிருந்தது.

இந்த நிலையில் குல்பதின் நைப் பந்துவீச்சில் மேக்ஸ்வெல் அடித்த பந்தை நூர் அகமது அசத்தலாக கேட்ச் பிடிக்க ஆட்டம் ஆப்கானிஸ்தான் பக்கம் வந்தது. இறுதியாக ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவரில் 127 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணி ஏற்கனவே பட்ட காயத்திற்கு சிறப்பான சம்பவத்தை செய்தது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் கூறும் பொழுது ” ஆமாம் இன்று என்னால் நன்றாக தூங்க முடியும் என்று நினைக்கிறேன். 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி நான் தூங்க முடியாத இரவு எனக்கு கொடுத்தது. எனக்கு மீண்டும் மீண்டும் அந்த நினைவுகள் வந்து கொண்டே இருப்பது. மேக்ஸ்வெல் தனியாளாக அப்படியான உணர்வை எனக்கு தந்துவிட்டார். ஆனால் இன்று நாங்கள் அதற்கு வெற்றி பெற்று இருக்கிறோம். இப்பொழுது என்னால் மகிழ்ச்சியால் தூங்க முடியாது என்று நான் நினைக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆப்கான் வெற்றி.. இந்திய அணிக்கு ஏற்பட்ட சிக்கல்.. அரையிறுதிக்கு செல்ல என்ன நடக்கக்கூடாது?.. முழு அலசல்

இது இரு நாடுகளுக்கு இடையே ஆன தொடர் கிடையாது. இது உலகக்கோப்பை தொடர். மேலும் 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற அணிக்கு எதிரான வெற்றி இது. எனவே இது மிகப்பெரிய வெற்றி. இப்படிப்பட்ட அணியை நீங்கள் தோற்கடித்தால், அது உங்களுக்கு எப்போதும் பெரிய ஆற்றலை தருகிறது.மேலும் அது உங்களை தூங்க விடாது” என்று கூறி இருக்கிறார்.