எங்க தேசத்து மக்களுக்கு மகத்தான வெற்றி.. 2023ல விட்டத புடிச்சிட்டோம் – ரஷித் கான் பேட்டி

0
84
Rashid

ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடரில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான அணி வரலாற்று வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் அந்த அணி அரையிறுதி வாய்ப்பிலும் தொடர்கிறது. இந்த வெற்றிக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் பல விஷயங்கள் தொடர்பாக பேட்டி அளித்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் 49 பந்தில் 60 ரன்கள், இப்ராகிம் ஜட்ரன் 48 பந்தில் 51 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி இலக்கை நோக்கி விளையாடி 19.2 ஓவர்களில் 127 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணியில் மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடிய 41 பந்தில் 51 ரன்கள் எடுத்து வெற்றிக்காகப் போராடினார். முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்குப் பின் பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் “ஒரு அணியாகவும் தேசமாகவும் எங்களுக்கு இது மிகப்பெரிய வெற்றி. கடந்த கடந்த முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விட்டதை இப்பொழுது பிடித்திருக்கிறோம். வெற்றியில் மகிழ்ச்சி அடைகிறேன் அதே நேரத்தில் எங்கள் வீரர்கள் குறித்து பெருமைப்படுகிறேன். நாங்கள் வழக்கமாக விளையாடும் பிளேயிங் லெவன் உடன் வந்ததுமிகவும் முக்கியமானது. நாங்கள் எதிர் அணியின் பவுலிங் வரிசையைப் பார்த்து அதற்கு ஏற்றவாறு விளையாடும் வீரர்களை தேர்வு செய்கிறோம்.

இந்த விக்கெட்டில் 148 ரன்கள் குவித்தது சிறப்பான விஷயம். எங்களுடைய துவக்க ஆட்டக்காரர்கள் அருமையான பார்ட்னர்ஷிப் கொடுத்தார்கள். ஆனால் நாங்கள் அதை முடித்த விதம் சரியானதாக இல்லை. நாங்கள் அமைதியாக நம்பிக்கையுடன் இருக்கும் வரை இந்த போட்டியில் வெற்றி பெற முடியும் என்று தெரியும். ஆல்ரவுண்டர்களைக் கொண்ட இந்த அணியின் அழகு அதுதான்.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்க சத்தியமா இதனால ஆப்கான் கிட்ட தோக்கலை.. எங்க தோல்விக்கு காரணம் இதுதான் – ஆஸி கேப்டன் மார்ஸ் பேட்டி

இன்று குல்பதின் பந்து வீசிய விதம், அவருக்கு இருக்கும் அனுபவம் மற்றும் வார்னர் விக்கெட்டை கைப்பற்றி நபி தொடங்கிய விதம் என எல்லாமே சிறப்பானது. நாட்டிற்கும் உலகம் முழுவதும் உள்ள எங்கள் மக்களுக்கும் இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. எங்கள் மக்கள் பெருமைப்படுவார்கள் மற்றும் இந்த விளையாட்டு ரசித்து இருப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.