இன்று டி20 உலகக் கோப்பை தொடரில் உச்சபட்ச பரபரப்பான போட்டி ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஸ் பேசியிருக்கிறார்.
பெரிய அளவில் பேட்டிங் பலம் இல்லாத அணிகள் முதலில் பேட்டிங் செய்வது சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என பல கிரிக்கெட் வல்லுனர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். பேட்டிங்கை விட பந்துவீச்சு பலமாக இருந்தால், இரண்டாவதாக பந்து வீசுவதுதான் சரி என்பதாக இருக்கிறது.
இந்த நிலையில் இன்று டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சல் மார்ஸ் ஆப்கானிஸ்தான் அணிக்கு சாதகமாக அவர்களை முதலில் பேட்டிங் செய்ய வைத்தார். இது பேட்டிங்கில் பலம் குறைந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு சேசிங்கில் இருக்கும் பிரஷரை குறைத்து விட்டது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் அடித்து, 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ஆப்கானிஸ்தான் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்தது.
இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 19.2 ஓவரில் 127 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. மேக்ஸ்வெல் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி 59 ரன்கள் எடுத்தார். இந்த தோல்வியின் காரணமாக தற்பொழுது ஆஸ்திரேலியா அணியின் அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.
தோல்விக்கு பின் பேசிய ஆஸ்திரேலியா கேப்டன் மிட்சல் மார்ஸ் “ஆப்கானிஸ்தான அணி கூடுதலாக 20 ரன்கள் எடுத்து விட்டார்கள். நேர்மையாக சொல்வது என்றால் அவர்கள் சிறந்த கிரிக்கெட் விளையாடினார்கள். இன்று இரவு அதனால் நாங்கள் வீழ்த்தப்பட்டோம்.டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வது குறித்து நாங்கள் யோசித்தோம். ஆனால் இங்கு பல அணிகள் முதலில் பந்து வீசதான் செய்திருக்கின்றன.
இதையும் படிங்க : தொடர்ந்து 2 ஹாட்ரிக் விக்கெட்.. பாட் கம்மின்ஸ் அசுரத்தனமான சாதனை.. ஆனால் ஆப்கான் தந்த சோகம்
நிச்சயமாக நாங்கள் டாஸ் வென்று அவர்களை பேட்டிங் செய்ய வைத்ததால் தோற்கவில்லை. இந்த விக்கெட் விளையாடுவதற்கு எளிதான ஒன்றாக இல்லை. அடுத்து நாங்கள் இந்திய அணிக்கு எதிராக விளையாட இருக்கிறோம். அந்த போட்டியில் தெளிவாக நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று இருக்கிறது. இன்று இரவு தங்கள் வெற்றி பெறுவதற்கு ஆப்கானிஸ்தான் அணியை விட சிறந்தவர்களாக இல்லை” என்று கூறியிருக்கிறார்.