இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் மே மாதம் கடைசியில் முடிவடைந்ததும், ஜூன் மாதம் ஆரம்பத்தில் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்க இருக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிப்பு ஏப்ரல் கடைசி வாரத்தில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சில விஷயங்கள் டி20 உலக கோப்பைக்கு இந்தியாவின் சிக்கலாக சென்று கொண்டிருக்கிறது.
தற்போது இந்திய டி20 அணிக்குள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா கொண்டுவரப்பட்டிருப்பதால், யார் இவர்களுக்கு பதிலாக அணியிலிருந்து வெளியே செல்வார்கள்? என்பது முக்கிய கேள்வி. மேலும் இவர்கள் இருவரது ஸ்டிரைக் ரேட் சம்பந்தமாக வெளியில் நிறைய விவாதங்கள் செல்கிறது.
இதற்கடுத்து டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம்பெறப் போகும் இரண்டு விக்கெட் கீப்பர்கள் யார்? என்பதும் முக்கிய கேள்வியாக இருந்து வருகிறது. அடுத்து துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மற்றும் பினிஷர் ரிங்கு சிங் ஆகியோர் பேட்டிங் ஃபார்ம் திடீரென கவலை தருகிறது. மேலும் ரிங்கு சிங் சிறிது காயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இவரைப் போலவே குல்தீப் யாதவும் காயத்தில் இருந்தார். மேலும் அர்ஸ்தீப் சிங் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு கடைசிக்கட்ட ஓவர்களில் அமையவில்லை.
இப்படி டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற அதிக வாய்ப்புள்ள வீரர்களின் உடல் தகுதியும், தற்போது அவர்களின் பார்மும் கொஞ்சம் பின்னடைவை சந்தித்து இருப்பது இந்திய தேர்வுக் குழுவுக்கு புதிய தலைவலியை உருவாக்கி இருக்கிறது. தற்பொழுது ஐபிஎல் தொடரை விட எப்படியான டி20 உலக கோப்பை இந்திய அணி அமையும்? என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
நியூசிலாந்தின் முன்னாள் வீரர் சைமன் டால் ஹர்திக் பாண்டியா உடல் தகுதியாக இல்லை என்றும், அவர் இதை வெளியில் காட்டாமல் மறைத்து வருகிறார் என்றும், அவர் முதலில் தொடக்கப் ஓவர்களை வீசியும், பிறகு இரண்டு போட்டிகளில் பந்துவீச்சில் ஈடுபடாமல் இருப்பதும் தனக்கு பெரிய சந்தேகத்தை உண்டு செய்கிறது என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க : ரகானே பாய் ஓபனிங் வந்த காரணம் இதுதான்.. இந்த முடிவை நான்தான் எடுத்தேன் – கேப்டன் ருதுராஜ் விளக்கம்
தற்பொழுது இதே கருத்தை பேசி உள்ள ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் ” ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது பந்துவீச்சில் உள்ள பாசிட்டிவான விஷயம் என்னவென்றால், அவர் அந்த சவாலை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார் என்பது மட்டும்தான். மற்றபடி அவர் எந்த விதத்திலும் சரளமாக இல்லை. அவரும் அவருடைய பந்து வீச்சும் சிதறல் அடைந்து இருக்கிறது. அவர் சரியானபடி இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனால் ஹர்திக் பாண்டியா காயத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடுகிறாரா? என்பதும், இப்படி விளையாடினால் டி20 உலக கோப்பையில் பங்கேற்க முடியுமா? என்பதும் விவாதம் ஆகி இருக்கிறது. பிசிசிஐ ஐபிஎல் தொடருக்காக டி20 உலகக்கோப்பையை விட்டுத் தருகிறதா? என்றும் விவாதம் செல்கிறது.