“ஜடேஜாகிட்ட அந்த ரகசியத்தை கேட்டு பாருங்க.. அப்புறம் வெறுத்துடுவிங்க” – ஆஸி பிராட் ஹாடின் பேச்சு

0
196
Jadeja

இந்திய அணி உள்நாட்டில் தொடர்ந்து 17 டெஸ்ட் தொடர்களை தோற்காமல் வென்று அசத்தியிருக்கிறது. இந்திய அணியின் உள்நாட்டு வெற்றிகளுக்கு மிக முக்கிய காரணமாக இருவர் இருக்கிறார்கள்.

ஒருவர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றொருவர் ரவீந்திர ஜடேஜா. இவர்கள் இருவரது பந்துவீச்சையும் இந்தியாவில் எதிர் கொண்டு வெற்றிகரமாக விளையாடுவது என்பது மிகப்பெரிய விஷயம்.

- Advertisement -

பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்யக்கூடிய மாற்றங்கள் பற்றி உலகம் முழுவதும் பலர் வியந்து பேசியிருக்கிறார்கள். ஆனால் ரவிந்திர ஜடேஜாவோ இதற்கு அப்படியே நேர்மாறானவர்.

ஏனென்றால் அவர் பந்துவீச்சில் எந்தவிதமான பெரிய மாற்றங்களையும் செய்யவே மாட்டார். தொடர்ந்து ஒரே பகுதியில் வீசிக்கொண்டே இருப்பார், ஏதாவது ஒரு பந்து ஆடுகளத்தில் வேறு மாதிரியாக ரியாக்ட் செய்யும் பொழுது, பேட்ஸ்மேன் பரிதாபமாக விக்கெட்டை கொடுக்க வேண்டியதாக இருக்கும்.

ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சின் சிறப்பு அம்சம் என்னவென்றால் அவருடைய துல்லியம்தான். அவர் எங்கு வீச வேண்டுமோ அங்கு தொடர்ந்து ஆறு பந்துகளையும் வீசுவார். பேட்ஸ்மேன்தான் முன்வந்து அடிக்க வேண்டும். இதன் காரணமாக விக்கெட் வாய்ப்புகள் அவருக்கு இயல்பாக உருவாகும்.

- Advertisement -

இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் பிராட் ஹாடின் கூறும்பொழுது “ஜடேஜா எந்தவொரு டெஸ்ட் தொடருக்கு பிறகும் பேசுவதற்கும் மிகவும் சுவாரசியமானவர். எல்லா ஸ்பின்னர்களுமே பந்தை எப்படி அண்டர் கட் செய்தீர்கள்? இல்லை வந்து டாப்பில் எப்படி வந்தீர்கள்? என்று கேட்பார்கள். ஆனால் ஜடேஜா ‘ நான் நேராகத்தான் ஸ்டெம்பில் வீசினேன்’ என்று கூறுவார்.

அவர் ‘நான் ஸ்டெம்ப்பை பார்த்து வீசினேன் மற்றதை விக்கெட் பார்த்துக் கொண்டது என்று கூறும் நபர். ஆனால் இதை பார்க்கும் நபர்களோ இந்த பந்து மட்டும் எப்படி திரும்பாமல் நேராக சென்றது என்று யோசிப்பார்கள்.

நீங்கள் பேட்ஸ்மேன் ஆக இருந்தால் ஒரு பந்து மட்டும் எப்படி நேராக சென்றது என்று நினைப்பீர்கள். அதைப் போய் அவரிடம் கேட்டீர்கள் என்றால், நான் நேராகத்தான் வீசினேன் அது வழுக்கிக் கொண்டு சென்றுவிட்டது என்பார்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : “ஸ்ரேயாஸ் ஐயருக்கு நடந்தது அநியாயம்.. நீங்களே பாருங்க” – ஆதாரத்தை அடுக்கிய கவாஸ்கர்