இந்திய கிரிக்கெட்

ஆசிய கோப்பையில் திடீர் குழப்பம்.. இந்திய அணி திடீரென செய்த காரியம்.. தொடரை புறக்கணிக்கிறதா? – என்ன நடந்தது?

தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகளின் பிரச்சனையால் தேவையற்ற பதட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று இந்திய அணி எடுத்த ஒரு முடிவு மேலும் குழப்பத்தை அதிகரித்து இருக்கிறது.

- Advertisement -

இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காத சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போட்டி நடுவரை ஒட்டுமொத்த தொடரில் இருந்தும் நீக்க கேட்டுக் கொண்டது. ஆனால் ஐசிசி அப்படி எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க முடியாது என தெரிவித்துவிட்டது. இதைத்தொடர்ந்து யூகிக்க முடியாத பல விஷயங்கள் ஆசியக் கோப்பை தொடரை சுற்றி நடந்து வருகின்றன.

பாகிஸ்தான் எடுத்த முடிவு

கிரிக்கெட் சட்டத்தில் வீரர்கள் கைகுலுக்காமல் சென்றால் அதற்கு தண்டிக்க வேண்டும் என்கின்ற எந்த விதிகளும் இல்லை. மேலும் இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் சென்றதற்கும் போட்டி நடுவருக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பதும் தெரிய வந்தது. இதன் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என ஐசிசி திட்டவட்டமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துவிட்டது.

எனவே பாகிஸ்தான் அணி நிர்வாகம் பத்திரிக்கையாளர் சந்திப்பை நேற்று திடீரென ரத்து செய்துவிட்டது. இதனால் பாகிஸ்தான் தொடரில் இருந்து வெளியேறுகிறதா? என்கின்ற கேள்விகள் எழுந்தது. ஆனால் இந்த விவகாரங்கள் குறித்து மேலும் பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்விகள் கேட்கப்படும் என்பதால் பாகிஸ்தான் ரத்து செய்தது தெரியவந்தது. எனவே பாகிஸ்தான் தொடரில் தொடர்ந்து விளையாடும் என்பது உறுதியாகி இருக்கிறது.

- Advertisement -

இந்தியா செய்த காரியம்

இந்த நிலையில் இந்திய அணி இன்று செப்டம்பர் 17ஆம் தேதி புதன்கிழமை தன்னுடைய பயிற்சி அமர்வையும் பத்திரிக்கையாளர் சந்திப்பையும் திடீரென ரத்து செய்துவிட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு யூகங்கள் எழுந்திருக்கின்றன. இந்திய அரசு ஏதாவது முக்கிய முடிவை எடுத்துவிட்டது என்று வெளியில் பேசப்படுகிறது.

இதையும் படிங்க: சூர்யாவ நான் அசிங்கமா பேசினேனா?.. இர்பான் பதான் அப்ரிடிய மோசமா பேசினப்ப எங்க போனீங்க? – முகமது யூசுப் கேள்வி

அதே சமயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திகள் இன்று முழுமையான ஓய்வு நாள் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட பயிற்சி அட்டவணையில் இன்று பயிற்சி மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பாகிஸ்தான் அணியை போலவே பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டாம் என இந்திய அணி நிர்வாகம் ஒதுங்கி இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள். எனவே இந்திய அணி தொடரில் இருந்து விலகாது என்று பேசப்படுகிறது.

- Advertisement -
Published by
Tags: Asia CupBCCI