நேற்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது யூசுப் சூரியகுமார் யாதவை மோசமான வார்த்தையை குறிப்பிட்டு பேசியதற்கு வருத்தம் தெரிவிக்காமல் தொடர்ந்து அதை நியாயப்படுத்தி வருகிறார்.
இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் போட்டி முடிந்ததும் கைகுலுக்காமல் சென்றார்கள். இந்தியாவில் நடந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்திய அணி நிர்வாகம் இவ்வாறு நடந்து கொண்டதாக விளக்கம் அளித்தது. ஆனால் பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதற்கு கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
யூசுப் மோசமான பேச்சு
விவகாரம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் பேச வந்த முகமது யூசுப் தொடர்ந்து சூரியகுமார் யாதவ் பெயரை சுவார்குமார் யாதவ் என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சியை நடத்தக்கூடியவர் பெயர் திருத்திச் சொன்ன போதும் அவர் திருத்திக் கொள்ளாமல் வேண்டுமென்றே இப்படி சொன்னார். காரணம் சுவர் என்றால் இந்தியில் பன்றி என அர்த்தம் வரும். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது.
இந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு லாகூர் டெஸ்ட் போட்டியின் போது ஒரே விமானத்தில் இந்தியா பாகிஸ்தான் வீரர்கள் சென்று உள்ளார்கள். அப்போது சாகித் அப்ரிடி இர்பான் பதானிடம் மோசமான வார்த்தைகளால் பேசியிருக்கிறார். இதற்கு திருப்பி பதிலடி கொடுத்த இர்பான் பதான் இவர் நாய் கறி உண்பவராக இருக்க வேண்டும் அதனால் தான் இப்படி குறைக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
மோசமாக சமாளிக்கும் யூசுப்
தற்போது தன்னை திட்டிய சாகித் அப்ரிடியை திருப்பித் திட்டிய இர்பான் பதானின் செயலை வைத்து முகமது யூசுப் மோசமான முறையில் தான் செய்த தவறை சமாளித்திருக்கிறார். இதன் காரணமாக அவருக்கு இன்னும் எதிர்ப்புகள் இந்திய தரப்பில் இருந்து அதிகரித்திருக்கிறது.
இதையும் படிங்க: ஆசிய கோப்பை தொடரில்.. ருதுராஜ் சேர்க்கப்படாத காரணமே இந்த விஷயம் தான்.. உண்மையை உடைத்த அஜய் ஜடேஜா
இதுகுறித்து முகமது யூசுப் பேசும்பொழுது “தனது நாட்டிற்காக ஆர்வத்துடனும் தீவிர முயற்சி உடனும் விளையாடும் எந்த ஒரு வீரரையும் நான் அவமதிக்கவில்லை. ஆனால் சாகித் அப்ரிடியை நாய் போல் குறைக்கிறார் என்று பேசிய இர்பான் பதானை இந்திய ஊடகங்களும் மக்களும் ஏன் புகழ்கிறார்கள்? கண்ணியம் மற்றும் மரியாதை பற்றி பேசும் அனைவரும் இந்த விஷயத்தை கண்டித்திருக்க வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.






