தற்போது இந்திய கிரிக்கெட்டுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பல இளம் திறமைகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வகையில் ஹைதராபாத் அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் அபிஷேக் சர்மா கவனிக்கத்தக்கவராக இருக்கிறார். அவருடைய பேட்டிங் முறை குறித்து ஆகாஷ் சோப்ரா யுவராஜ் சிங் உடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும் பொழுது “அபிஷேக் ஷர்மா ஒரு நல்ல ஸ்டோரி. அபிஷேக் சர்மாவின் ஹிட்டிங் ஸ்டைலை பார்த்தால், அவருடைய பேக் லிஃப்ட் நன்றாக வருகிறது. அவருடைய பேட்டிங் டவுன்ஸ்விங் சூப்பராக இருக்கிறது. இந்த விஷயங்கள் எனக்கு யுவராஜ் சிங்கை ஞாபகப்படுத்துகின்றன. அவருடைய பேட்டிங்கில் நல்ல கிளாஸ் இருக்கிறது.
டிராவிஸ் ஹெட் எப்படி அடிக்க வேண்டும் என மக்களுக்கு வகுப்பு எடுக்கிறார் என்பது போல இருக்கிறது. அவருடைய ஷாட்களின் நீட்டிப்புதான் அபிஷேக் சர்மாவாக இருக்கிறார். ஹெட் ஸ்டிரைக் ரேட் 296 என்றால், அபிஷேக் ஷர்மா ஸ்டிரைக் ரேட் மிக அருகில் 270 என இருக்கிறது.
அபிஷேக் ஷர்மா இந்திய அணியில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். அவர் இந்திய அணியில் வரவேண்டும். இனி நம்மிடம் ஸ்ட்ரைக்கர்கள் இல்லை என்று சொல்ல முடியாது. நம்மிடம் பல பெயர்கள் இருக்கிறது. தற்பொழுது அபிஷேக் சர்மா இருக்கிறார். மேலும் ஏற்கனவே பேட்டிங் உச்சியில் ஜெய்ஸ்வால் இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவ், ஷஷாங்க் சிங், அசுத்தோஸ் சர்மா, ராகுல் திவாட்டியா, நிதிஷ் ரெட்டி, சிவம் துபே, ரிங்கு சிங், ரிஷப் பண்ட், ரியான் பராக் மற்றும் சஞ்சு சாம்சங் என பல வீரர்கள் சிறந்த ஸ்ட்ரைக்கர்களாக இருக்கிறார்கள். மேலும் சிலர் இருக்கலாம் நான் அவர்கள் பெயரை மறந்திருப்பேன்.
இதையும் படிங்க : ஹெட் கிளாசன் இருக்கும் போது.. ஓவருக்கு 5 ரன் அடிக்கிறதா?.. வெளியே அனுப்பி இருக்கனும் – மேத்யூ ஹைடன் விமர்சனம்
இப்போது நம்மிடம் பெரிய ஹிட்டர்கள் பட்டியல் இருக்கிறது. தற்பொழுது அடிக்கக் கூடிய வீரர்கள் நம்மிடம் இல்லை என்று யாரும் திரும்பி செல்ல முடியாது. ஒருவேளை வீரர்களை தேர்வு செய்தால், அது இந்த வீரர்களின் தவறாக இருக்காது. செலக்டர்களின் தவறாகத்தான் இருக்கும். இவர்கள் பேட்டிங் செய்யும்பொழுது, இந்தியா இனி எப்படி பேட்டிங் செய்யும் என்பதற்கான எதிர்காலம் உங்கள் முன்னால் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.