ஹெட் பத்தி பஞ்சாப் பசங்களுக்கு தெரியும்.. அவர் எங்க பக்கம் இருக்கிறது அதிர்ஷ்டம் – அபிஷேக் ஷர்மா பேட்டி

0
110
Abhishek

நேற்று டெல்லி அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியிலும் வழக்கம் போல் ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடி 266 ரன்கள் குவித்து மிரட்டியது. மேலும் ஹைதராபாத் தொடக்க ஜோடி அபாரமாக விளையாடியது. இதில் டிராவிஸ் ஹெட் பற்றி அபிஷேக் ஷர்மா மிகவும் புகழ்ந்து பேசி இருக்கிறார்.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் வெறும் 38 பந்துகளில் 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். குறைந்த பந்துகளில் முதல் 100 ரன்கள் எடுத்தது, பவர் பிளேவில் அதிக ரன்கள் எடுத்தது, முதல் 10 ஓவரில் அதிக ரன்கள் எடுத்தது என இந்த ஜோடி அபாரமான சாதனைகளை நேற்று உருவாக்கியது.

- Advertisement -

இரண்டு பேரும் இடதுகை துவக்க ஆட்டக்காரர்களாக இருக்கிறார்கள். அதேபோல் இருவரும் ஒரே மாதிரியான மனநிலையில் அதிரடியாக போட்டியை அணுகுகிறார்கள். கிடைக்கும் எல்லா பந்தையும் அடிக்கும் நோக்கம் மட்டுமே இவர்களிடம் இருக்கிறது. இதன் காரணமாக பந்துவீச்சாளர்களின் திட்டங்கள் மாறி, அவர்கள் விக்கெட்டை கைப்பற்றுவதற்காக நிறைய இடங்களில் பந்தை மாற்றி மாற்றி பேசுகிறார்கள். இதை இவர்கள் பயன்படுத்தி மிக எளிதாக ரன்கள் அடிக்கிறார்கள்.

நேற்றைய போட்டியில் அபிஷேக் சர்மா 12 பந்தில் 46 ரன்கள் எடுத்திருக்க, டிராவிஸ் ஹெட் 32 பந்தில் 89 ரன்கள் குவித்திருந்தார். இவர்கள் ஏற்படுத்திய அடிப்படை, அந்தப் போட்டியை ஒட்டுமொத்தமாக ஹைதராபாத் அணி எடுத்துக் கொள்வதற்கு வசதியாக இருந்தது. பவர் பிளேவில் இவர்கள் அடித்த ரண்களே மொத்த போட்டியையும் வெல்ல போதுமானதாக அமைந்துவிட்டது.

இந்த நிலையில் தன்னுடைய பேட்டிங் பார்ட்னர் டிராவிஸ் ஹெட் பற்றி பேசி இருக்கும் அபிஷேக் ஷர்மா கூறும் பொழுது “ஹெட்டை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் நாங்கள் களத்திற்கு வெளியே நிறைய பேசிக் கொண்டிருக்கிறோம். நடப்பு ஐபிஎல் சீசன் முழுவதும் பேட்டிங் செய்ய வேண்டும் என நான் ஆவலுடன் எதிர்பார்த்த ஒருவர் அவர்.

- Advertisement -

இதையும் படிங்க : வெறும் 12.1 ஓவர்.. 2வது டி20ல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அபாரம்.. இளம் நியூசிலாந்து அணி பரிதாப தோல்வி

பஞ்சாப் பையன்களுக்கு அவரைப் பற்றி நன்றாக தெரியும். டிராவிஸ் ஹெட் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பானவர். அதிர்ஷ்டவசமாக நாங்கள் அவரை எங்கள் அணியில் சேர்த்தோம். ஐபிஎல் தொடருக்கு முன்பாக நான் சையத் முஸ்டாக் அலி தொடரில் நிறைய உழைத்திருக்கிறேன். அது எனக்கு தற்பொழுது ஐபிஎல் தொடரில் உதவுகிறது” என்று கூறி இருக்கிறார்.