“எப்படி உங்களால மீசையில மண்ணு ஒட்டலனு உட்கார்ந்து இருக்க முடியுது” – அபினவ் முகுந்த் இங்கிலாந்துக்கு கேள்வி

0
66
Abinav

இங்கிலாந்து அணி 2022 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருநாள் கிரிக்கெட் போல் அதிரடியாக விளையாட வருவதை வழக்கமாக வைத்திருக்கிறது. இந்த வகையில் அவர்கள் விளையாடி இதுவரையில் ஒரு டெஸ்ட் தொடரை கூட இழக்கவில்லை.

மேலும் இந்தியாவிற்கு டெஸ்ட் சுற்றுப்பயணம் வந்து முதல் டெஸ்ட் போட்டியை யாரும் எதிர்பார்க்காத வகையில் அபாரமாக வென்றார்கள். இதன் காரணமாக அவர்களுடைய டெஸ்ட் கிரிக்கெட் அதிரடி அணுகுமுறை குறித்து இருந்த விமர்சனங்கள் மொத்தமாக விலகியது.

- Advertisement -

இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிராக அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வி அடைந்தது.

இதன் காரணமாக இங்கிலாந்து அணியின் அணுகுமுறையின் மீதான விமர்சனங்கள் மீண்டும் கிளம்ப ஆரம்பித்தது. குறிப்பாக இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் பொது அறிவுடன் செயல்பட்டு விளையாட வேண்டும் என கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்கள்.

இங்கிலாந்து அணியின் முதுகெலும்பான நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் பாஸ்பால் அணுகுமுறையில் தேவையில்லாமல் அதிரடியாக விளையாட சென்று தனது விக்கெட்டை தொடர்ந்து தாரை வார்த்து வந்தார். விமர்சனங்களை ஜோ ரூட் ஆடும் முறை இன்னும் அதிகரித்தது.

- Advertisement -

இன்று துவங்கி நடைபெறும் இந்த தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி முதல் செஷன் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் அடித்தது. அவர்களின் ரன் ரேட் ஒரு ஓவருக்கு ஐந்துக்கும் மேல் இருந்தது.

ஆனாலும் கூட ரன் ரேட் எவ்வளவு இருந்தாலும் அவர்கள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து விட்டார்கள். இதனால் அவர்கள் அதிரடியாக விளையாடினால் எந்த பயனும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் ஜோ ரூட் மற்றும் பென்ஃபோக்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து இரண்டாவது செஷன் முழுமையாக விக்கெட் தராமல் விளையாடி இருக்கிறார்கள். ஆனால் 31 ஓவர்களுக்கு அவர்கள் 86 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்கள். ரன் ரேட் ஓவருக்கு மூன்று கூட இல்லை.

இதையும் படிங்க : ஆகாஷ் தீப்புக்கு ரோகித் சர்மா செய்த காரியம்.. தரமான கேப்டன்ஷியில் தரமான சம்பவம்

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அபிநவ் முகுந்த் கூறும் பொழுது “எப்படி இங்கிலாந்து தன்னுடைய பாஸ்பால் அணுகு முறையில், இன்னும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று ஃபெவிலியினில் அமர்ந்திருக்க முடிகிறது. ஓவருக்கு ஐந்து ரன்கள் பக்கம் அடித்து இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஐந்து விக்கெட்டுகளை இழந்திருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு என்ன லாபம் வந்துவிடப் போகிறது?” காட்டமாகக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.