ஆகாஷ் தீப்புக்கு ரோகித் சர்மா செய்த காரியம்.. தரமான கேப்டன்ஷியில் தரமான சம்பவம்

0
390
Rohit

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

இன்றைய போட்டிக்கு டாஸ் வென்ற இங்கிலாந்து வழக்கம் போல் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பது புரியாமல் அவர்கள் அதிரடியாக துவங்கவில்லை.

- Advertisement -

அறிமுக இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் ஒரு முனையில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அவரது லைன் மற்றும் லென்த், ஆடுகளத்தில் பந்து சீம் ஆன முறை மிகவும் சிறப்பாக இருந்தது.

அதே சமயத்தில் பொறுமை காத்த இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர் ஜாக் கிரவுலி முகமது சிராஜின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து ரன் ரேட்டை உயர்த்தினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா சுழற் பந்துவீச்சை கொண்டுவரும் முடிவுக்கு சென்றார். ஆனால் ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா இந்த இடத்தில் அற்புதமான முடிவை எடுத்தார்.

அனுபவ வீரரான முகமது சிராஜிக்கு ஸ்பெல்லை நிறுத்திய ரோகித் சர்மா, அறிமுக வீரரான ஆகாஷ் தீப்புக்கு ஸ்பெல்லை நிறுத்தவில்லை. ஆகாஷ் தீப் நோபால் காரணமாக ஒரு விக்கெட்டை இழந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரோகித் சர்மா அவரை தொடர்ந்து பந்து வீச அனுமதித்தார். அவர் அனுமதித்த ஐந்தாவது ஓவரில் ஆகாஷ் தீப் இரட்டை விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு இன்னும் கூடுதல் ஓவர் கிடைக்க அவர் இன்னும் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இதையும் படிங்க : லெஜன்ட் கேரி சோபர்ஸ் பட்டியலில் அஸ்வின்.. 50 ஆண்டு வரலாறு.. இங்கிலாந்துக்கு எதிராக மெகா ரெக்கார்ட்

கேப்டன் ரோஹித் சர்மா வீரரின் மனநிலையை புரிந்து, அவருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் வகையில் ஓவர்களை சேர்த்து கொடுத்து, அவருடைய அறிமுகத்தை மிகச் சிறப்பான ஒன்றாக மாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -