விராட் காலத்தை விட.. ரஜத் படிதார் டீம் 100 மடங்கு பெட்டரா இருக்கு.. காரணம் இதுதான் – ஏபி டிவில்லியர்ஸ் பேச்சு

0
162
Virat

ஐபிஎல் தொடர் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்பொழுது ஆர்சிபி அணி 100 மடங்கு சிறப்பாக இருப்பதாக முன்னாள் ஆர்சிபி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்திருக்கிறார்.

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணியை ஆர்சிபி அணி தோற்கடித்து சாதனை வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இதன்மூலம் ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் ரஜத் படிதார் மதிப்பு பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது.

- Advertisement -

எதிர்பாராத மாற்றங்கள்

நேற்றைய போட்டியில் புவனேஸ்வர் குமார் விளையாடுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்தது. இந்த நிலையில் எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக புவனேஸ்வர் குமார் நேற்றைய போட்டியில் பந்து வீசுவதற்கு வந்தார். பவர் பிளேவில் மிகச் சிறப்பாக பந்துவீசிய அவர் மூன்று ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து இம்பேக்ட் பிளேயராக ராசிக் சலாமை கொண்டு வருவதற்கு சரியான சூழ்நிலை இருந்தது. இருந்த போதிலும் கூட சுழல் பந்துவீச்சாளர் சுயாஸ் சர்மாவை நம்பிக்கையாக கொண்டு வந்து சிக்கனமாக பந்து வீசவைத்தார். இந்த வகையில் ஆர்சிபி அணி மிகவும் சிறப்பான முறையில் புத்திசாலித்தனமாக ரஜத் பட்டிதார் தலைமையில் இருந்தது.

- Advertisement -

நூறு மடங்கு சிறப்பாக இருக்கிறது

இது குறித்து ஏபி.டிவில்லியர்ஸ் பேசும்போது “முந்தைய சீசன்களுடன் ஒப்பிடும்பொழுது ஆர் சி பி அணியின் சமநிலை 100 மடங்கு சிறப்பாக இருக்கிறது. நான் புவனேஸ்வர் குமாரை பார்க்கும் பொழுது அவர் விளையாட மாட்டார் என்று நினைத்தேன். ஆனால் அவர் இப்போது உள்ளே இருக்கிறார். அதுதான் நமக்கு வேண்டும்”

இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. சேப்பாக்கம் ஒகே? கவுகாத்தியில் என்ன பண்ண போறாங்க.. சிஎஸ்கே பிளேயிங் லெவனில் குழப்பம்

“போகும் இடமெல்லாம் பார்ப்பவர்கள் ஆகா இவரிடம் அணியில் வந்து விட்டாரா என்று ஆச்சரியப்படுகிறார்கள். ஏனென்றால் முதல் போட்டியில் அவர் அணியில் இல்லாமல் இருந்தார். ஒரு அணியை ஒன்றாக பயணம் செய்வதன் மூலம் அதிகப்படியான ஒற்றுமையுடன் இருக்கும். ஏனென்றால் ஒரே இடத்தில் தங்கி இருந்தால் அவரவர் அவரவர் வேலையை பார்ப்பார்கள். ஆனால் பயணத்தில் எப்பொழுதும் ஒன்றாக இருப்பார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -