ஐபிஎல் 2025.. சேப்பாக்கம் ஒகே? கவுகாத்தியில் என்ன பண்ண போறாங்க.. சிஎஸ்கே பிளேயிங் லெவனில் குழப்பம்

0
11

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டியில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என புள்ளி பட்டியலில் தற்போது 7வது இடத்தில் இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதால் பிளேயிங் லெவனில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தார்கள்.

இதில் நூர் அகமது சிஎஸ்கே அணியின் முக்கிய பௌலராக விளங்கி வருகிறார். இந்த தருணத்தில் சிஎஸ்கே அணி நடப்பு சீசனில் முதல் முறையாக சென்னையை விட்டு வெளியே விளையாடுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும். இந்த போட்டியில் சிஎஸ்கே அணி ராஜஸ்தான் அணியை கவுஹாத்தியில் எதிர்கொள்கிறது.

- Advertisement -

அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா?

இதனால் சிஎஸ்கே அணியில் யாரை சேர்ப்பது யாரை விடுவது என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது அஸ்வின், ஜடேஜா, நூர் அகமது என மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ள நிலையில் கவுகாத்தி ஆடுகளம் எவ்வாறு செயல்படும் என்ற சந்தேகம் இருக்கிறது. மூன்று ஸ்பின்னர்கள் வைத்து ஆடும் அளவுக்கு அந்த ஆடுகளம் செயல்படாது.

இதனால் பிளேயிங் லெவனில் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அஸ்வினுக்கு பேட்டிங்கும் தெரியும் என்பதால் அவருக்கு பதில் நூர் அகமதை நீக்கிவிட்டு ஆஸ்திரேலிய வீரர் நாதன் எல்லிசை சேர்க்கவும் ஒரு திட்டம் இருக்கிறது. ஆனால் நூர் அகமது தான் சிஎஸ்கே அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வருவதால் அவரை அணியை விட்டு அனுப்புவதும் சரியாக இருக்காது.

- Advertisement -

யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்:

இதனால் அன்சூல் காம்போஜ், கமலேஷ் நாகர்கொட்டி அல்லது முகேஷ் சவுத்ரி போன்ற இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில் பிளேயிங் லெவனில்  ஏதேனும் ஒருவரைக் கொண்டு வர சிஎஸ்கே முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக அஸ்வின் கவுஹாத்தியில் நடைபெறும் போட்டியில் வெளியே அமர வைக்கப்படலாம். இதே போன்று பேட்டிங் வரிசையில் சாம்கரனை நீக்கிவிட்டு கான்வேவை சேர்க்கவும் சிஎஸ்கே அணியில் திட்டம் இருக்கிறது. ஓய்வே இல்லாமல் ஒரு நாள் இடைவெளியில் சிஎஸ்கே இரண்டு போட்டிகளில் விளையாடப் போவது இங்கு கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. சுயநலமா? தியாகமா? ருதுராஜ் செய்தது தவறா? தொடரும் பரிதாபம்

சிஎஸ்கே உத்தேச பிளேயிங் லெவன்: 1, ரச்சின் ரவீந்திரா, 2.ராகுல் திரிபாதி, 3. ருதுராஜ், 4. சிவம் துபே 5. ஜடேஜா, 6. தோனி, 7. விஜய் சங்கர் / ரஷித் 8. நூர் முகமது, 9. பதிரனா 10. கலீல் அகமது 11. அன்சூல் காம்போஜ்/ முகேஷ் செளதிரி

- Advertisement -