“இஷான் கிஷான் போனை எடுங்க தம்பி.. அப்பதான் டீம்ல எடுப்பாங்க.. டிராவிட் சரி” – ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
189
Dravid

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஏதாவது ஒரு வடிவத்தில் ஏதாவது ஒரு பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கிறது. பேட்டிங் வரிசையில் நான்காம் இடத்தில் விளையாடுவது யார் என்கின்ற பிரச்சனை நீண்ட காலமாக இருந்தது.

இதற்கு அடுத்து இந்திய அணியில் இடது கை சுழற் பந்துவீச்சாளர் மற்றும் இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லை என்கின்ற பிரச்சனை நீடித்தது. இதற்கு அடுத்து தற்பொழுது விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் யார்? என்கின்ற பெரிய பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -

வெள்ளைப்பந்து டி20 கிரிக்கெட்டில் நீடித்துக் கொண்டிருந்த இந்த பிரச்சனை தற்பொழுது சிவப்புப் பந்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் இந்திய அணியில் வந்திருக்கிறது.

ரிஷப் பண்ட் இல்லாத காரணத்தினால் இசான் கிஷானுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவதால் மனச்சோர்வாக இருப்பதாக கூறி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடரில் இருந்து இசான் கிஷான் விலகிக் கொண்டார்.

இதற்கு அடுத்து வந்த கேஎஸ்.பரத் எதிர்பார்த்ததை விட மிக மோசமாக விளையாடுகிறார். இதன் காரணமாக விக்கெட் கீப்பருக்கு தற்பொழுது என்ன செய்வது என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் நிறைய பேச்சுகள் சென்று கொண்டிருக்கிறது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இருந்த கீப்பர் பிரச்சனை இப்பொழுது இந்த பக்கத்திற்கும் வந்துவிட்டது.

- Advertisement -

மேலும் ராகுல் டிராவிட் இஷான் கிசான் பற்றி கூறும் பொழுது, அவர் ஓய்வை முடித்துக் கொண்டு விட்டாரா? போட்டிகளில் பங்கேற்க தயார் நிலையில் இருக்கிறாரா? என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. எனவே அவரைத் தேர்வு செய்வது குறித்து எதுவும் பரிசீலிக்கப்படவில்லை எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசி இருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “ராகுல் டிராவிட் கூறியது முற்றிலும் சரியானது. முதலில் இஷான் கிஷான் தனக்கு தொடர்பில் வரவேண்டும் என்றும், பிறகு அவர் விளையாட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். ஏனென்றால் எதுவுமே செய்யாமல் இருக்கின்ற ஒருவரை இந்திய அணிக்கு தேர்வு செய்ய முடியாது.

மேலும் ரஞ்சி கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டு வருவதால் அவர் உள்நாட்டு தொடர்களில் பங்கேற்று விளையாட வேண்டும். இன்னும் சொல்லப்போனால் போனை எடுத்து அவர் எதுவுமே சொல்லவில்லை.

ஜிதேஷ் சர்மாவை தேர்வு செய்ததால் அவர் கோபித்துக் கொண்டார் என்று ஒரு வதந்தி பரவியது. முதலில் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய தேவை என்பதால் ஜிதேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இஷான் கிசான் ஐந்து அல்லது ஆறில் பேட்டிங் செய்ய ஆடிஷன் தர கிடையாது. எனவே அந்த இடத்தில் ஜிதேஷ் மட்டுமே விளையாடுவார்.

இதையும் படிங்க : “ஆவரேஜ் பிளேயர்தான் ஆவரேஜ் பார்ப்பார்.. நான் இந்த இந்திய வீரர் மாதிரி விளையாடறேன்” – முகமது ரிஸ்வான் பேச்சு

எனவே இது ஒரு பிரச்சினையாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. மேலும் இந்தப் பிரச்சினையில் சஞ்சு சாம்சன் உடனும் இவரை ஒப்பிட மாட்டேன். இந்திய அணி நிர்வாகம் மிகுந்த அன்புடன் இசான் கிசானை வைத்திருந்தது. எனவே அவர்கள் அவரை ஒதுக்க மாட்டார்கள் என நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.