“பும்ராகிட்ட நான் விளையாடும்போது பார்த்து பயந்தது இந்த விஷயம்தான்” – ஏபி டிவில்லியர்ஸ் பேச்சு

0
317
Bumrah

உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்து இந்தியா பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

இதற்கு அடுத்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் திரும்ப வந்து வெற்றி பெற்று தொடரை சமன் செய்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை நம்பிக்கை அடைய வைத்திருக்கிறது.

- Advertisement -

நடைபெற்று முடிந்திருக்கும் இரண்டு போட்டிகளுக்கும் வழக்கமான சுழல் பந்துவீச்சு சாதகமான ஆடுகளங்கள் கொடுக்கப்படவில்லை. மேலும் ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சுக்கும் பெரிய சாதகங்கள் இல்லை.

இப்படியான நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 15 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இரண்டாவது டெஸ்டில் ஆட்டநாயகனாகவும் அவரே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் போப்புக்கு வீசிய ஒரு யார்க்கர் பலகாலம் கிரிக்கெட் நினைவில் இருக்கும். மேலும் இந்த போட்டி முடிவுக்கு பின் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து, மூன்று வடிவங்களிலும் முதல் இடத்தை பிடித்த முதல் பந்துவீச்சாளர் என்கின்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் பும்ரா பந்துவீச்சு குறித்து பேசி உள்ள ஏபி.டிவிலியர்ஸ் “அவர் அற்புதமாக பந்து வீசுகிறார். அவர் என்ன மாதிரியான ஒரு சிறந்த பந்துவீச்சாளர்! மற்ற எல்லா இந்திய பந்துவீச்சாளர்களையும் விட சிறப்பாக பதிவு செய்தார். ஆனாலும் மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் அவருக்கு கொடுத்த ஒத்துழைப்பு மிகச் சிறந்தது. இந்திய அணியிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இதுதான்.

பும்ராவுக்கு யார்க்கர் அவர் விளையாடும் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அவருக்கு மிகப்பெரிய ஆயுதம். நான் அவருக்கு எதிராக விளையாடும் பொழுது இதை மிகப்பெரிய அச்சுறுத்தலாக நினைப்பேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட இதை வைத்து அவர் கைப்பற்றுகிறார்.

இந்திய அணி ஒரு சிறந்த ஸ்டேட்மெண்ட்டை கொடுத்திருக்கிறது. முதல் போட்டியின் தோல்வியை துடைத்து விட்டு இரண்டாவது போட்டியில் வெற்றிக்கு திரும்பியது. ஒரு சிறந்த அணிக்கு இதுதான் அடையாளம்.

இதையும் படிங்க : “தம்பி பாஸ்பாலை நம்பாத.. அ நீ நம்ப வேண்டியது இதைத்தான்” – ஜோ ரூட்டுக்கு வாகன் அறிவுரை

நடந்து முடிந்த இரண்டு போட்டிகள் கொடுக்கப்பட்ட ஆடுகளங்கள் போலவே சிறந்த ஆடுகளங்கள் கொடுக்கப்பட வேண்டும். சிறந்த ஆடுகளத்தில் இந்தியா மிகச் சிறப்பாக செயல்படுகிறது. முதல் நாளிலிருந்து பந்து திரும்பும் ஆடுகளங்களை விட, நாளுக்கு நாள் ஆடுகளம் சேதம் அடையும் வகையில் இருக்கும் பொழுது, இந்தியாவின் பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக வெளியில் வருகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.