“தம்பி பாஸ்பாலை நம்பாத.. நீ நம்ப வேண்டியது இதைத்தான்” – ஜோ ரூட்டுக்கு வாகன் அறிவுரை

0
190
Root

இந்தியாவிற்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வரும் வெளிநாட்டு பேட்ஸ்மேன்களில் ஒரு சிலர் மட்டுமே ரன்கள் எடுத்திருக்கிறார்கள். மேலும் ஒருவர் தன்னை சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று பதிவு செய்வதற்கு இந்தியாவில் ரன்கள் எடுக்க வேண்டியது அவசியம்.

இந்த வகையில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் இந்தியா மட்டும் இல்லாமல் ஆசியா முழுவதிலும் நல்ல பேட்டிங் சராசரி வைத்திருக்கிறார். இதன் காரணமாகவே அவர் தற்கால கட்டத்தில் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

ஜோ ரூட் கடந்த நான்கு வருடங்களில் மட்டும் 14 டெஸ்ட் சதங்கள் அடித்து இருக்கிறார். இதில் இந்தியா மற்றும் இலங்கையில் அவர் இரண்டு இரட்டை சதங்கள் அடித்ததும் அடக்கம்.

சுழற் பந்து வீச்சுக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடக்கூடிய வெளிநாட்டு பேட்ஸ்மேன்களில் ஜோ ரூட்டுக்கு மிக முக்கியமான இடம் இருக்கிறது. கடந்த இங்கிலாந்தின் இந்திய சுற்றுப்பயணத்தில் ஜோ ரூட் முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து இங்கிலாந்து அணியை வெல்ல வைத்தார்.

ஆனால் தற்போது அவர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நான்கு இன்னிங்ஸ்களிலும் 52 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். மேலும் அவர் ஆட்டம் இழக்கும் விதம் மிகவும் கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. இதற்கு மிக முக்கியக் காரணம் அதிரடியான பாஸ்பால் அணுகுமுறை தான் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

- Advertisement -

இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறும் பொழுது ” இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஒரே வழியில்தான் விளையாடுகிறார்கள். அவர்கள் எடுத்ததும் ஐந்தாவது கியரில் விளையாடுகிறார்கள். இப்படி ஒரு சில இங்கிலாந்து பேட்ஸ்மேன் விளையாடுவது பிரச்சனை கிடையாது. அவர்கள் அப்படி விளையாட சிறந்தவர்கள்.

ஆனால் ஜோ ரூட் ஒரு விஷயத்தை மறந்து விடக்கூடாது. அவரிடம் 10,000 டெஸ்ட் கிரிக்கெட் ரன்கள் இருக்கின்றன. அவர் பாஸ்பால் விளையாட வேண்டிய அவசியமே கிடையாது. அவர் பாஸ்பாலை நம்பாமல் தன்னை நம்ப வேண்டும்.

இதையும் படிங்க : ICC ரேங்கிங்.. பும்ரா யாரும் செய்யாத சாதனை.. உலக கிரிக்கெட்டில் முதல் வீரர்

இங்கிலாந்து அணி நிர்வாகத்தில் இருக்கும் யாராவது ஜோ ரூட்டை அவரது வழியில் விளையாட சொல்ல வேண்டிய நேரம் இது. சுழல் பந்துவீச்சுக்கு எதிராக கிரகம் கூச்சுக்கு அடுத்து மிகச் சிறப்பாக விளையாடக்கூடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட்தான். ஆனால் தற்போது அவர் பேட்டிங் செய்யும் விதத்தை பார்க்கும் பொழுது பழைய ஜோ ரூட் ஆக தெரியவில்லை. விக்கெட்டை பரிசாக கொடுத்தால் இந்தியாவில் வெற்றி பெற முடியாது” எனக் கூறியிருக்கிறார்.