“அஸ்வின் இத நீங்க எப்பவாவது பார்த்தா நல்லது.. முதல் முறை எனக்கு” – ஏபி.டிவில்லியர்ஸ் பேட்டி

0
417
Ashwin

இந்த முறையை இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் மிகக் குறைவாக இருக்கிறது.

இந்திய அணியின் இரட்டை சுழல் தாக்குதல்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும், ஒட்டுமொத்தமாக எதிரணியின் இரண்டு இன்னிங்ஸையும் இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள்.

- Advertisement -

ஆனால் இந்த முறை ஆடுகளங்கள் சுழல் பந்துவீச்சுக்கு பெரிய சாதகம் கொடுப்பதாக அமைக்கப்படவில்லை. அதே சமயத்தில் வேகப்பந்துவீச்சிக்கும் பெரிய சாதகங்கள் இல்லை என்றாலும் கூட, இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்.

நடந்து கொண்டிருக்கும் இந்த டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆடுகளத்தின் மீது தவறுதலாக ஓடியதால், இந்திய அணிக்கு பெனால்ட்டியாக 5 ரன்கள் பறிக்கப்பட்டு இங்கிலாந்து அணிக்கு கொடுக்கப்பட்டது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வரும் பொழுது இலவசமாக ஐந்து ரன்கள் பெற்றுக் கொண்டு வந்து ஆரம்பித்து, அன்றைய நாளில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குறித்தது. பென் டக்கெட் சதமும் அடித்து இருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து தற்பொழுது பேசியுள்ள ஏபி டிவில்லியர்ஸ் கூறும் பொழுது “அஸ்வின் ஆடுகளத்தில் ஓடியது எனக்கு பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. ஒரு பந்து கூட வீசப்படாமல் இங்கிலாந்து அணிக்கு ஐந்து ரன்கள் என ஸ்கோர் போர்டில் காட்டியதை பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இது எனக்கு முதல் அனுபவம். நீங்கள் பேட்ஸ்மேனாக இருக்கும் பொழுது ரிஸ்க் சிங்கிள் எடுப்பதற்கு, சைடிலோ அல்லது சுற்றிக்கொண்டோ ஓடும் பொழுது ரன் அவுட் வாய்ப்புகள் இருக்கும். எனவே நேராக ஓடினால் இதைத் தவிர்க்கலாம். எனவே இது இதற்கான தந்திரமாக இருக்கலாம்.

இதையும் படிங்க : “தப்பா சொல்லாதிங்க என் சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிக்கல” – வாசிம் அக்ரம் திடீர் பேச்சு

அஸ்வின் நான் இப்போது சொல்வதை நீங்கள் எப்போதாவது கேட்டால் அதற்கு என் வாழ்த்துக்கள். நான் விளையாட கடினப்பட்ட பந்துவீச்சாளர்களில் நீங்களும் ஒருவர். ஜடேஜா மற்றும் அஸ்வின் இருவருமே இந்திய அணிக்கு மிகச்சிறந்த டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள். ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில்என்ன ரோலை செய்கிறாரோ, அதற்கான பெருமையை அவர் ஒருநாளும் பெற்றதே கிடையாது” எனக் கூறிஇருக்கிறார்.