“தப்பா சொல்லாதிங்க என் சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிக்கல” – வாசிம் அக்ரம் திடீர் பேச்சு

0
237
Akram

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில், இந்திய அணியின் இடது கை துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார்.

மூன்றாவது நாளின் கடைசி செசனில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த அவர், இடுப்பு பகுதிகள் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக விளையாட முடியாமல் வெளியேறினார்.

- Advertisement -

அடுத்த நாள் முதல் விக்கட்டாக கில் வெளியேறியதும் உள்ளே வந்த ஜெய்ஸ்வால் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை வதம் செய்து இரண்டாவது இரட்டை சதத்தை இந்த தொடரில் அடித்தார்.

ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் அவர் மொத்தம் 22 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார். ஒரு டெஸ்ட் தொடரில் ஒரு பேட்ஸ்மேன் அடிக்கும் அதிகபட்ச சிக்சர் உலகச்சாதனையாக பதிவாகி இருக்கிறது.

மேலும் அவருடைய இரட்டை சதத்தில் மொத்தம் 12 சிக்ஸர்கள் அடித்து இருந்தார். ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்களாக இதுவும் முதல் இடத்தில் பதிவானது.

- Advertisement -

இதன் மூலம் 1996 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வாசிம் அக்ரம் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அடித்திருந்த அதிகபட்ச சிக்சர் சாதனையை முறியடித்து விட்டதாக எல்லா சமூக வலைதளங்களிலும் பரவி இருந்தது.

தற்பொழுது இதுகுறித்து வாசிம் அக்ரம் தன்னுடைய கருத்தை பதிவு செய்யும் பொழுது ” ஜெய்ஸ்வால் மொத்தம் அந்த இன்னிங்ஸில் 12 சிக்ஸர்கள்தான் அடித்து இருந்தார். நானும் 12 சிக்ஸர்கள்தான் அடித்தேன். எனவே என்னுடைய சாதனையை அவர் முறியடிக்கவில்லை. அவர் என்னுடைய சாதனையை சமன்தான் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க : “ஒரு பையன பத்தி சொல்ல வார்த்தையே இல்ல.. இன்னொரு பையன் விளையாடறதே இதமா இருக்கு” – ஏபிடிவில்லியர்ஸ் பேட்டி

மேலும் நான் ஜிம்பாப்வேக்கு எதிராக அடித்தது சுலபம் என்பது போல பேசுகிறார்கள். நான் உள்ளே செல்லும் பொழுது பாகிஸ்தான் அணி 170 ரன்களுக்கு ஆறு விக்கெட் இழந்திருந்தது. அந்த நேரத்தில் நான் விளையாடியது சுலபமான ஒன்று கிடையாது” எனக் கூறியிருக்கிறார்.