நான் அவங்கள தூண்டி விட்டுட்டேன்.. ஆனா ஏமாற விரும்பல.. டி20 உ.கோ விளையாடுவது பற்றி சுனில் நரைன் பேச்சு

0
32
Narine

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த சுனில் நரேன், டி20 உலக கோப்பைக்கு திரும்புவது குறித்து முக்கிய கருத்தை தெரிவித்திருக்கிறார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சுனில் நரேன் கடந்த நவம்பர் மாதம் 2023ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார். ஆனால் 2019ஆம் ஆண்டிற்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அவர் எந்த கிரிக்கெட் தொடரிலும் விளையாட வில்லை. ஐபிஎல் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிளப் கிரிக்கெட் லீக்குகளில் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வந்தார்.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு கௌதம் கம்பீர் ஆலோசராக பதவி ஏற்றதில் இருந்து, சுனில் நரேன் தொடக்க ஆட்டக்காரராக அனுப்பி வைக்கப்பட, இந்த சீசனில் பேட்டிங்கில் தனது அற்புதமான பார்மை நரேன் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 56 பந்துகளில் 109 ரன்கள் விளாசி சாதனை படைத்தார்.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வரும் தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோமன் பவுல் டி20 உலக கோப்பைக்கு நரேன் திரும்புவது குறித்து கடந்த ஒரு வருடமாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். அவரை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் விளையாடுவது குறித்து மனம் திறந்துள்ள சுனில் நரேன் எனது முடிவில் மாற்றமில்லை டி20 உலக கோப்பைக்காண கதவு மூடப்பட்டுவிட்டது என்று கூறி இருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது
“சமீப காலமாக எனது செயல்பாடுகள் பலரை பகிரங்கமாக தூண்டிவிட்டு நான் ஓய்வில் இருந்து வெளியேறி வரவிருக்கும் டி20 உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்று அவர்களது விருப்பத்தை வெளிப்படுத்தியதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்.

- Advertisement -

ஆனால் நான் எடுத்த முடிவில் சமாதானம் அடைந்து விட்டேன். திரும்பவும் அந்த முடிவில் மறுபரிசீலனை செய்து ஏமாற்றம் அடைய விரும்பவில்லை. வருகிற டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட போகும் வீரர்களுக்காக எனது ஆதரவை தெரிவிக்கிறேன். உலகக் கோப்பைக்காக கடந்த சில மாதங்களாக மிகக் கடினமாக உழைத்துள்ளீர்கள்.

இதையும் படிங்க : நான் பதிரனாவுக்கு பந்து வீச்சு பயிற்சி அளிக்க மாட்டேன்.. இதுதான் காரணம் – பிராவோ பேட்டி

மற்றொரு உலகக் கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணி என்று ரசிகர்களுக்கு வெளிக்காட்டு தயாராக இருக்கும் வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். உலகக் கோப்பை குறித்து சுனில் நரேனின் இந்த அறிக்கை, ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.