399 ரன்.. இந்தியா சாதனை இலக்கு.. இங்கிலாந்து சாதிக்குமா?.. 2008 மீண்டும் திரும்புமா?

0
539
ICT

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு இலக்காக 399 ரன்கள் நினைத்து இருக்கிறது.

நேற்று 143 ரன்கள் முன்னிலை பெற்றதோடு, விக்கெட் இழப்பில்லாமல் இந்திய அணி 28 ரன்கள் சேர்த்து, மொத்தமாக 161 ரன்கள் முன்னிலை பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 17, ரோஹித் சர்மா 13, சுப்மன் கில் 110, ஸ்ரேயாஸ் ஐயர் 29, ரஜத் பட்டிதார் 9, அக்சர் படேல் 45, கேஎஸ் பரத் 5, ரவிச்சந்திரன் அஸ்வின் 29, குல்தீப் யாதவ் 0, பும்ரா 0, முகேஷ் குமார் 0* என ரன்கள் எடுத்தார்கள்.

முடிவில் இந்திய அணி 78.3 ஓவர்களில் 255 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. 143 ரன்கள் ஏற்கனவே முன்னிலை பெற்று இருந்த காரணத்தினால், இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இலக்கை நிர்ணயித்திருக்கிறது.

இந்தப் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஒரு பேட்ஸ்மேன் விளையாட மற்ற எல்லா பேட்ஸ்மேன்களும் தவறான முறையில் விளையாடும் விக்கெட்டை பறிகொடுத்து இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் இந்த போட்டியில் சதம் அடித்த சுப்மன் கில்லும் மூன்று அவுட் வாய்ப்புகளில் இருந்து தப்பித்துதான் சதத்தை அடித்தார். இளம் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

இந்த நிலையில் இதுவரை இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்காக 387 ரன்கள் இருக்கிறது. 2008ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக சேவாக் சச்சினின் அபார ஆட்டத்தால் இந்திய அணி இந்த போட்டியை வென்று இருந்தது.

இதையும் படிங்க : 28 வருடங்கள்.. சச்சின் கங்குலிக்கு பிறகு.. இந்திய டெஸ்ட் அணியில் சிறப்பான சம்பவம்

தற்பொழுது இந்திய அணி நிர்ணயத்திற்கும் 399 ரன்கள் இலக்கை இங்கிலாந்து வெற்றிகரமாக கடந்தால், இந்தியாவில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச டெஸ்ட் இலக்காக இது அமையும். இந்த வகையில் இங்கிலாந்துக்கு மிகப்பெரிய சாதனை ஒன்று காத்திருக்கிறது. சாதிக்குமா? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.