28 வருடங்கள்.. சச்சின் கங்குலிக்கு பிறகு.. இந்திய டெஸ்ட் அணியில் சிறப்பான சம்பவம்

0
103
ICT

இந்திய கிரிக்கெட் மூன்று வடிவங்களிலுமே தற்பொழுது புதிய இளம் வீரர்களை கொண்டு புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் இருந்து வருகிறது.

தற்பொழுது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்டிங் யூனிட்டில் அனுபவ வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் அவருக்கு அடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின்தான் இருக்கிறார் என்பது நல்ல உதாரணம்.

- Advertisement -

இதன் காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நல்ல இடத்தில் இருந்த போதெல்லாம், உடனே பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கட்டை கொடுத்து நிலைமையை சிக்கலாகி கொண்டே வருகிறார்கள். இரண்டாவது இன்னிங்ஸிலும் இது தொடர்கிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்சில் இளம் வீரர் ஜெய்ஷ்வால் 209 ரன்கள் குவித்தார். பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளத்தில், ஒரு பேட்ஸ்மேன் இரட்டை சதம் அடித்திருக்கும் பொழுது, குறைந்தபட்சம் அந்த அணி 500 ரன்கள் எட்டும். ஆனால் மற்ற எந்த பேட்ஸ்மேனும் சரியாக விளையாடாததால் இந்திய அணி 400 ரன்கள் கூட எடுக்கவில்லை.

இதற்கு அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் எல்லா இந்திய பேட்ஸ்மேன்களும் வரிசையாக வெளியேற, மூன்று முறை அவுட்டில் இருந்து தப்பித்த சுப்மன் கில் 110 ரங்கள் அடித்து தவறான நேரத்தில் ஆட்டமிழந்து சென்றார்.

- Advertisement -

இந்த போட்டியில் சுவாரசிய ஒரு விஷயமாக 22 வயதான ஜெய்ஸ்வால் மற்றும் 24 வயதான சுப்மன் கில் இருவரும் இந்திய அணிக்கு ஒரே போட்டியில் சதம் அடித்திருக்கிறார்கள். புதிய அணி உருவாக்கத்தில் இளைஞர்கள் உள்ளே வருகிறார்கள்.

இதையும் படிங்க : பும்ரா பவுலிங்ல விளையாடுவதை வெறுக்கிறேன்.. ஜோ ரூட்டாலே முடியல” ஸ்டூவர்ட் பிராட் கருத்து

இதற்கு முன்பு இதேபோல் 24 வயதுக்கு உட்பட்ட இரண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த போட்டியாக 1998 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான நடந்த டெஸ்ட் போட்டி அமைந்திருக்கிறது. அந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலி இருவரும் இந்திய அணிக்கு சதம் அடித்திருந்தார்கள். நீண்ட காலம் இவர்கள் இந்திய அணிக்கு விளையாடியது போலவே, இந்த இரண்டு வீரர்களும் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.