AUSvsWI.. கேப்டனாக மீண்டும் ஸ்மித் அசத்தல்.. முன்னேறி வரும் வெஸ்ட் இண்டீஸ்.. போட்டி முடிவு

0
217
Australia

வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று வடிவிலான கிரிக்கட் தொடர்களிலும் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமனில் முடிந்து இருக்க, தற்பொழுது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

மெல்போன் மைதானத்தில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகுத்தது. இந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டிஸ் முதலில் பந்து வீசுவது என முடிவு செய்தது. ஆஸ்திரேலியா அணிக்கு சீன் அப்போட் 69, மேத்யூ ஷார்ட் 41, கேமரூன் கிரீன் 33, லபுசேன் 26, ஆரோன் ஹார்டி 26 ரன்கள் எடுக்க 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது.

பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோடி 3, அல்ஜாரி ஜோசப் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கே சி கார்தி 40, கேப்டன் ஷாய் ஹோப் 29, ரோஸ்டன் சேஸ் 25 என மூவர் மட்டுமே ஓரளவுக்கு ரன் பங்களிப்பு தந்தார்கள். மற்ற யாரும் பேட்டிங்கில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.

இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவரில் 175 மட்டுமே எடுத்து சுருண்டது.இரண்டாவது ஒரு நாள் போட்டியை 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றி இருக்கிறது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேஸில்வுட், சீன் அப்போட் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதையும் படிங்க : 399 ரன்.. இந்தியா சாதனை இலக்கு.. இங்கிலாந்து சாதிக்குமா?.. 2008 மீண்டும் திரும்புமா?

ஆஸ்திரேலியா அணிக்கு நீண்ட காலத்துக்குப் பிறகு கேப்டனாக வந்த ஸ்மித் தொடரை கைப்பற்றி இருக்கிறார். ஆனாலும் ஓய்வில் இருந்து கம்மின்ஸ் வந்த பிறகு அவரை கேப்டனாக தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.