ஐபிஎல்-க்கு 30 நாள்.. ராஜஸ்தான் ராயல்ஸ் சொந்த மைதானத்துக்கு சீல் வைப்பு.. என்ன நடந்தது?

0
314
RR

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பெயர் எப்பொழுதும் உச்சத்தில் மேலே ஞாபகம் வைக்கப்பட்டிருக்கும்.

காரணம் 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரை வென்ற அணி ராஜஸ்தான் ராயல்ஸ். மேலும் அந்த அணிக்கு ஆஸ்திரேலியாவின் மறைந்த ஷேன் வார்ன் கேப்டனாகவும், பயிற்சியாளராகவும் இருந்து இளம் வீரர்கள் கொண்ட அணியை வழிநடத்தி, இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றினார்.

- Advertisement -

அதற்குப் பிறகு அவர்களுக்கு ஐபிஎல் தொடரில் பெரிய அளவிலான செயல்பாடுகள் ஏதும் இல்லை. அடுத்து ராகுல் டிராவிட் தலைமையில் சிறிது காலம் பயணித்த அந்த அணியால், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடிந்தது, ஆனால் தொடரை கைப்பற்றும் அளவுக்கு சிறப்பாக இல்லை.

இந்த நிலையில் சஞ்சு சாம்சன் தலைமையில் அந்த அணி குறிப்பிடும்படி விளையாடி வருகிறது. கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு ஐபிஎல் சீசனில் இறுதிப்போட்டிக்கு சென்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தோல்வி அடைந்து பட்டத்தை இழந்திருந்தது.

இப்பொழுது இந்த வருடத்திற்கான 17 வது ஐபிஎல் சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சொந்த மைதானமாக இருக்கும் சவாய் மான் சிங் மைதானத்துக்கு சீல் வைக்கப்பட்டு இருப்பது இந்திய கிரிக்கெட்டில் சில அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து ராஜஸ்தான் விளையாட்டு செயலாளர் சோஹன் ராம் சவுத்ரி கூறும்பொழுது ” ராஜஸ்தான் கிரிக்கெட் அசோசியேஷன் செலுத்த வேண்டிய பழைய பாக்கி எட்டு கோடி ரூபாய் திருப்பி செலுத்தவில்லை. இது குறித்து நாங்கள் அனுப்பிய நோட்டீஸ்க்கு அவர்கள் சரியான பதில் அனுப்பவில்லை. எனவே தற்பொழுது மைதானம் மற்றும் அதனுடன் இணைந்த அகாடமி சீல் வைக்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க : AUSvsNZ.. 10 ஓவர்.. நியூசிலாந்து வொய்ட் வாஷ்.. வேற லெவலில் ஆஸ்திரேலியா வெற்றி

அதே சமயத்தில் இங்கு தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளை நடத்தவோ அல்லது சர்வதேச போட்டிகளை நடத்தவோ எந்த தடையும் கிடையாது. இங்கு எல்லா போட்டிகளும் தொடர்ந்து நடக்கும்” எனக் கூறப்பட்டிருக்கிறது.