நண்பா சாதிச்சிட்ட.. தவறி வாங்கப்பட்ட ஷஷாங்க் சிங்குக்கு.. டேல் ஸ்டெயின் உணர்பூர்வமான பதிவு

0
15883
Shashank

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக ரன் சேஸில் பஞ்சாப் அணி உலகச் சாதனை படைத்திருக்கிறது. இந்த உலகச் சாதனையில் பஞ்சாப் பேட்ஸ்மேன் ஷஷாங்க் சிங் பங்கும் பெரிய அளவில் இருக்கிறது. அவர் குறித்து டேல் ஸ்டெயின் பாராட்டி பேசி இருக்கிறார்.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு சுனில் நரைன் 32 பந்தில் 71 ரன்கள், பில் சால்ட் 37 பந்தில் 75 ரன்கள் எடுக்க, அந்த அணி அனாயசமாக இருவது ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தது. கொல்கத்தா அணி 260 ரன்களை இரண்டாவது முறையாக நடப்பு ஐபிஎல் தொடரில் தாண்டி இருக்கிறது.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் 20 பந்தில் 54 ரன்கள் எடுத்து அதிரடியான துவக்கத்தை கொடுத்தார். இதற்கு அடுத்து விளையாட வந்த ரூசோவ் 16 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். ஒரு பக்கத்தில் ஜானி பேர்ஸ்டோ அதிரடியில் மிரட்டினார். ஆட்டத்தை கற்றுக்கொள்ளும் கொண்டு வந்து வைத்தார்.

கடைசியில் எட்டு ஓவர்களுக்கு 84 ரன்கள் தேவைப்பட்ட பொழுது ஷஷாங்க் சிங் விளையாட வந்தார். அவர் மொத்தம் வெறும் 28 பந்துகள் மட்டுமே சந்தித்து அதில் 2 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் குவித்து ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக முடித்து விட்டார். நேற்று அவரது ஆட்டம் சதம் அடித்த பேர்ஸ்டோவை விட பலரையும் கவர்ந்திருந்தது.

நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் 9 போட்டிகளில் விளையாடி, 2 அரை சதங்கள் உடன் 263 ரன்கள் எடுத்திருக்கிறார். அவருடைய ரன் ஆவரேஜ் 65 க்கு மேலாகவும், அவருடைய ஸ்ட்ரைக் ரேட்182 ஆகவும் இருக்கிறது. தன்னுடைய 32வது வயதில் கடின உழைப்பின் மூலம் தனது திறமையை ஐபிஎல் தொடரில் நிரூபித்திருக்கிறார். இவர் இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி கழட்டி விடப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : பேட்டிங் செய்யாம 260 ரன் குடுத்தா எடுத்துக்குவேன்.. நாங்க எந்த இடத்தில தவறு செஞ்சோம்? – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

ஷஷாங்க் சிங் குறித்து டேல் ஸ்டெயின் கூறும்பொழுது “என்னால் ஷஷாங்க் சிங்குக்காக மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. சில வருடங்களுக்கு முன்பு அவர் எங்களுடன் ஹைதராபாத் அணியில் இருந்தார். அவர் அவ்வளவு கடின உழைப்பாளி, அணிக்கான பையன். அவர் தன்னுடைய எல்லாவற்றையும் அணிக்காக கொடுப்பார். அவரது முகத்தில் எப்பொழுதும் ஒரு புன்னகை இருக்கும். வெல்டன் நண்பரே நீங்கள் எல்லாவற்றுக்கும் தகுதியானவர்!” என்று பாராட்டி கூறியிருக்கிறார்.