எப்பா சாமி 523 ரன் 42 சிக்ஸ்.. மிரண்ட சிஎஸ்கே.. தமிழில் ரிப்ளை கொடுத்த பஞ்சாப்.. சுவாரசிய நிகழ்வு

0
541
CSK

நடப்பு ஐபிஎல் தொடரில் பெரிய ரன் மழை பெய்து கொண்டிருக்கிறது. 250 ரன்கள் அடித்தாலும் பாதுகாப்பில்லை என்கின்ற நிலை உருவாகி இருக்கிறது. நேற்று கொல்கத்தா 261 ரன்கள் அடித்தோம் பஞ்சாப் கிங்ஸ் அதை திருப்பி அடித்து வென்றது. இந்தப் போட்டிக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்ட ஒரு போஸ்ட் வைரல் ஆகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி இருப்பதோடு, ஆடுகளங்கள் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமாக தட்டையாக அமைக்கப்படுகின்றன. மேலும் இத்தோடு இரவில் சில மைதானங்களில் பனிப்பொழிவு வந்துவிடுகிறது.

- Advertisement -

இப்படியான காரணங்களால் பேட்டிங் செய்வதற்கு சொர்க்கமாக ஐபிஎல் போட்டிகள் அமைகின்றன. கூடுதல் வீரர் கிடைப்பதால், எல்லா அணிகளும் முதல் பந்தில் இருந்து அடித்து விளையாட ஆரம்பிக்கின்றன. இதனால் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு நடப்பு ஐபிஎல் தொடரில் சிக்ஸர்களின் விகிதம் மிக அதிகமாக இருந்து வருகிறது.

நேற்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 18 சிக்ஸர்கள் அடித்தது. இதற்கு அடுத்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 24 சிக்ஸர்கள் அடித்தது. ஒட்டு மொத்தமாக ஒரு போட்டியில் 42 சிக்ஸர்கள் அடித்து, ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட உலக சாதனையை படைத்திருக்கிறது.

நேற்று நடந்து முடிந்த ரன் செசில் சாதனை படைக்கப்பட்ட இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற பிறகு, முதல்வன் படத்தில் மணிவண்ணன் ஆச்சரியமாக ரியாக்ட் செய்யும் போட்டோவை போட்டு, 523 ரன்கள் 42 சிக்ஸர்கள் என பஞ்சாப் கிங்ஸ் அணியை குறிப்பிட்டு சிஎஸ்கே அணி ட்விட் செய்து பாராட்டி இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : நண்பா சாதிச்சிட்ட.. தவறி வாங்கப்பட்ட ஷஷாங்க் சிங்குக்கு.. டேல் ஸ்டெயின் உணர்பூர்வமான பதிவு

இதற்கு பதில் அளித்துள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி தமிழில் “நன்றி விரைவில் சந்திப்போம்” என, அதே முதல்வன் படத்தில் இருந்து அர்ஜுன் போட்டோவை வைத்து ரீ ட்வீட் செய்திருக்கிறது. தற்பொழுது இரு அணிகளின் நகைச்சுவையான ட்வீட் வைரலாகி வருகிறது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்து ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிவிட்டு, தொடர்ந்து இரண்டு போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.