பிளான் படியே நடக்குது.. ஆர்சிபி-யின் பிளே ஆஃப் வாய்ப்பு.. ரசிகர் போட்ட கணக்கு.. ஆச்சரியமான போட்டி முடிவுகள்

0
46447
RCB

நடப்பு 17 வது சீசன் ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் வாய்ப்பு சுற்றுக்காக கால்குலேட்டரை கையில் எடுக்கும் நேரம் சில அணிகளுக்கு வந்து விட்டது. அதில் வழக்கம் போல் ஆர்சிபி அணி தற்பொழுது முதல் இடத்தில் இருக்கிறது. அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு குறித்து ரசிகர் ஒருவர் வெளியிட்ட கணக்குப்படியே, தொடர்ந்து ஐந்து ஆட்டங்கள் நடந்து முடிந்திருக்கிறது!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி இதுவரையில் மொத்தம் ஒன்பது போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. இன்னும் அந்த அணிக்கு எஞ்சி இருக்கும் ஐந்து ஆட்டங்களையும் வென்று, ஏழு வெற்றிகள் 14 புள்ளிகள் உடன், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு, மேற்கொண்டு விளையாடும் அணிகள் யார் வெல்ல வேண்டும் தோற்க வேண்டும் என்கின்ற கணக்கு ஒன்றை ஆர்சிபி ரசிகர் வெளியிட்டிருக்கிறார்.

- Advertisement -

இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவரது கணக்குப்படியே கடந்த ஐந்து போட்டிகளின் முடிவுகளும் அமைந்திருக்கின்றன. ராஜஸ்தான் மும்பைக்கு எதிராக ராஜஸ்தான், சிஎஸ்கே லக்னோவுக்கு எதிராக லக்னோ, டெல்லி குஜராத்துக்கு எதிராக டெல்லி, பெங்களூரு ஹைதராபாத்துக்கு எதிராக பெங்களூரு, பஞ்சாப் கொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் என, கடந்த ஐந்து போட்டியில் முடிவுகளும் அவர் வெளியிட்டுள்ள அட்டவணைப்படியே வந்திருக்கிறது.

மேலும் தற்பொழுது அவரது அட்டவணையில் இன்றைய நாள் சனிக்கிழமை நடைபெறும் இரண்டு போட்டிகளில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் மும்பை அணியும், லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதற்கு அடுத்து நாளை ஞாயிறு நடைபெறும் இரண்டு போட்டிகளில் குஜராத் மற்றும் பெங்களூர் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் பெங்களூரு அணியும், ஹைதராபாத் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் சிஎஸ்கே அணியும் வெற்றி பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : எப்பா சாமி 523 ரன் 42 சிக்ஸ்.. மிரண்ட சிஎஸ்கே.. தமிழில் ரிப்ளை கொடுத்த பஞ்சாப்.. சுவாரசிய நிகழ்வு

இப்படி மொத்தம் 33 போட்டிகள் எப்படி நடைபெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதில் இதுவரையில் 5 போட்டிகள் அந்த ஆர்சிபி ரசிகரின் கணக்குப்படியே நடந்திருக்கிறது. மீதம் இருக்கும் 28 போட்டிகளும் அவருடைய கணக்குப்படியே நடந்தால், ஆர்சிபி அணி ஏழு வெற்றிகள் பெற்று 14 புள்ளிகள் உடன், புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து, ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது