“இந்திய அணிக்கு அவங்க 2பேர் வர போறாங்க.. இந்த வீரர் வெளியே போகப் போறாரு” – ஜாகிர் கான் பேச்சு

0
69
Zaheer

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி தற்போது உள்நாட்டில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருக்கிறது

இந்த டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கு விராட் கோலி கிடைக்கவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் காயத்தால் இல்லை.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மிகவும் பலவீனமாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் மிக முக்கியமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றியை நோக்கி விளையாடி வருகிறது.

தற்பொழுது இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கின்ற காரணத்தினால், மீதி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு இனிதான் அணியை இந்திய தேர்வுக்குழு அறிவிக்கும்.

இந்த நிலையில் இந்திய அணியில் சில டெஸ்டுகள் தொடர்ந்து கில் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் பேட்டிங்கில் தேவையான அளவுக்கு செயல்படவில்லை. அவர்களுடைய இடம் ஆபத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஏமாற்றிய கில் இரண்டாவது இன்னிங்ஸ் சதம் அடித்து தன் இடத்தையும் அணியையும் காப்பாற்றினார். ஆனால் ஸ்ரேயாஸ் மீண்டும் இரண்டு இன்னிங்ஸிலும் ஏமாற்றி இருக்கிறார். அடுத்து விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து இருக்கின்றன.

இதுகுறித்து பேசி உள்ள ஜாகீர் கான் கூறும் பொழுது ” உங்களுக்கும் அணிக்கும் ஆன முக்கிய தருணங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது ஸ்ரேயாஸ் ஐயருக்கு முக்கியமான தருணம். ஆண்டர்சன் அடுத்து சுழல் பந்துவீச்சாளர்கள்தான் பந்து வீசப் போகிறார்கள்.

இப்படி இருக்கும் பொழுது உங்களிடம் சுழற் பந்துவீச்சை விளையாடும் நல்ல திறமை இருக்கிறது. அப்படியான நேரத்தில் ஒரு வாய்ப்பை வீணடித்தீர்கள். கடினப்பட்டு பந்தை அடிக்க சென்று உங்கள் விக்கெட்டை இழந்தீர்கள். இதற்கான விலையை நீங்கள் கொடுத்தாக வேண்டும்.

இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு தேர்வுக்குழு மீண்டும் அமர்ந்து அணியை தேர்வு செய்யும். கேஎல்.ராகுல் மற்றும் விராட் கோலி மீண்டும் வரலாம். இருவர் வந்தால் அணியில் இருக்கும் இருவர் வெளியேற வேண்டும்.

இதையும் படிங்க : “நேற்று மாலையே இந்திய அணி பயப்பட ஆரம்பிச்சிடுச்சு.. நாங்க ஜெயிக்க முடியும்” – அலைஸ்டர் குக் பேச்சு

கில் தற்பொழுது தன் இடத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். ஆனால் ஸ்ரேயாஸ் இடம் அப்படி கிடையாது. தற்பொழுது அவர் தனது வாய்ப்பை வீணடித்து விட்டார் என்று தான் கூற வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.