எந்த வீரரும் செய்யாத விராட் கோலி சாதனை.. ஜெய்ஸ்வால் சமன்.. அடுத்த போட்டியில் உடனே உடையும்

0
478
Virat

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இளம் இடது கை துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் பேட்டிங் பிரமிப்பானதாக இருந்து வருகிறது.

இந்த தொடரில் இதுவரையில் ஜெய்ஸ்வால் இரண்டு அரை சதங்கள் மற்றும் இரண்டு இரட்டை சதங்கள் என மொத்தமாக 65 ரன்கள் குவித்து இருக்கிறார்.

- Advertisement -

தற்பொழுது 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர் ஒட்டுமொத்தமாக மூன்று மெகா சதங்களுடன் 871 ரன்கள் குவித்து இருக்கிறார். எட்டு டெஸ்ட் போட்டியில் டான் பிராட்மேன் 1210 ரன்கள் எடுத்ததற்கு அடுத்ததாக இது இருக்கிறது. மேலும் இந்தத் தொடரில் ஜெய்ஸ்வால் ரன் சராசரி 93 என்று ஆச்சரியப்படுத்தும் எண்ணிக்கையில் இருக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிராக நான்காவது டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸில் 37 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்தார். இதற்கு முன்பாக அவர் 618 ரன்கள் எடுத்திருந்தார். இத்தோடு சேர்த்து அவர் மொத்தமாக நான்கு போட்டிகள் மற்றும் 8 இன்னிங்ஸ்களில் 655 ரன்கள் குவித்திருக்கிறார்.

2016-17ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்த பொழுது, இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலி மொத்தமாக 655 ரன்கள் குவித்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிராக ஒரு இந்திய பேட்ஸ்மேன் ஒரு டெஸ்ட் தொடரில் அடித்த பெரிய ரன் தொகையாக இது இருந்தது.

- Advertisement -

மேலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்தவராக கிரஹாம் கூச் 1990 ஆம் ஆண்டு 752 ரன்கள், 2021-22ஆம் ஆண்டில் ஜோ ரூட் 737 ரன்கள்எடுத்தது சாதனையாக இருக்கிறது.

தற்பொழுது ஜெய்ஸ்வால் இந்த டெஸ்ட் தொடரில் 655 ரன்கள் எடுத்து இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்தியராக இருந்த விராட் கோலியின் சாதனையை இப்போதைக்கு சமன் செய்திருக்கிறார். அடுத்த போட்டியில் ஒரு ரன் எடுத்தாலும் இந்த சாதனை உடைந்து விடும்.

இதையும் படிங்க : சொல்லியும் பேச்சை கேட்காத ஜெய்ஸ்வால்.. கோபமான ரோகித் சர்மா.. களத்தில் என்ன நடந்தது?

மேலும் இன்னும் 98 ரன்கள் அவர் அடுத்த டெஸ்ட் போட்டியில் எடுக்கும் பொழுது, இந்தியா இங்கிலாந்து இரு அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக புதிய சாதனை படைப்பார். மேலும் 771 ரன்கள் மொத்தமாக அவர் குவிக்கும் பட்சத்தில், ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்தியராக இருக்கும் கவாஸ்கர் சாதனையையும் முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.