உலக கோப்பை விஷயம்.. அழுதுவிட்டு நகர வேண்டியதுதான்.. வேற என்ன செய்ய? – ரிங்கு சிங் பேட்டி

0
72
Rinku

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக டி20 உலகக்கோப்பைக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக பினிஷர் ரிங்கு சிங் பெயர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் அவர் பல விஷயங்கள் தொடர்பாக மனம் விட்டு பேசி இருக்கிறார்.

சமீபத்தில் இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு மிகவும் நம்பிக்கை தரக்கூடிய வீரராக ரிங்கு சிங் அடையாளம் காணப்பட்டார். அவர் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் ஃபினிஷர் ரோலில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். அந்த ரோ லில் அவர் காட்டிய அமைதி மற்றும் முதிர்ச்சி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

எனவே நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் அவருக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை. அதே சமயத்தில் அவர் டி20 உலகக்கோப்பை நான்கு ரிசர்வ் வீரர்களில் ஒருவராக இடம் பெற்றார்.

இந்த நிலையில் பேசி இருக்கும் ரிங்கு சிங் கூறும் பொழுது “கடந்த ஆண்டு ஐந்து சிக்ஸர்கள் அடிப்பதற்கு முன்னால் ஐந்து சிக்ஸர்களை அடிப்பதற்கு பின்னால் என என் வாழ்க்கையை பிரிக்கலாம். இப்போது நான் விளம்பரங்களில் எல்லாம் நடிக்கிறேன். என்னால் தனியாக வெளியே போக முடியாது. என் பெயரில் மக்கள் இப்பொழுது பதாகை பிடிக்கிறார்கள். அவர்கள் என்னை உற்சாகப்படுத்துகிறார்கள். நான் வாழ்க்கையில் எதையோ சாதித்தது போல உணர்கிறேன்.

பொதுவாக நான் ஊக்கம் அளிக்கும் படங்களை பார்க்கும் பொழுது அழுகிறேன். கடைசியாக 12 பெயில் படத்தை பார்த்த பொழுது மனம் விட்டு அழுத்தேன். ஏனென்றால் அடிமட்டத்தில் இருந்து வந்திருக்கும் நான் என்னை அந்த படத்துடன் தொடர்பு படுத்திக் கொண்டேன். அப்படி இருந்து வரும் குழந்தைகள் தொடர்பான படத்தை பார்க்கும் பொழுது நான் அழுது விடுகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : 209 ஸ்ட்ரைக் ரேட்ல நொறுக்கி இருக்கேன்.. ஆனா இந்த பவுலரை ஒன்னுமே செய்ய முடியல – அபிஷேக் ஷர்மா பேட்டி

இந்தியா ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இழந்தது, அது ஒரு உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது. அதை அழுதுவிட்டு கடந்து விட வேண்டும் என விரும்புகிறேன். நான் நீண்ட காலமாக பினிஷர் ரோலில் விளையாடி இருக்கிறேன். எனவே எனக்கு என்ன செய்வது என்று தெரியும். நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். பந்துக்கு தகுந்தது போல ரியாக்ட் செய்ய வேண்டும்.நான்விளையாடிய அணிகளில் பெரிய கோப்பையை உயர்த்தியது இல்லை. எனவே இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வெல்ல விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.