நான் தோத்துட்டு போனாலும்.. என்ன ஒரே மாதிரி வரவேற்கக் கூடியது இது மட்டும்தான் – தோனி பேட்டி

0
978
Dhoni

தற்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறிவிட்டது. இந்த நிலையில் தோனிக்கு ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியே கடைசி போட்டியா? என்று பலரும் விவாதித்து வருகிறார்கள். இந்த நிலையில் தோனி சில வெளி விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பொழுது தோனி ஐபிஎல் தொடரை விட்டு விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களின் அன்புக்காக விளையாடுகிறேன் என்று அறிவித்தார். அதே சமயத்தில் அவர் எத்தனை ஆண்டுகள் விளையாடுகிறேன் என்பது குறித்து கூறவில்லை.

- Advertisement -

கடந்த ஆண்டு கால் முட்டியில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு அறுவை சிகிச்சைசெய்து அது குணமானது. ஆனால் ஐபிஎல் தொடருக்கு முன்பாக வேறு ஒரு புதிய காயம் அவருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் அவரால்பேட்டிங் வரிசையில் மேலே வந்து விளையாட முடியவில்லை.

அவர் குறித்து பேட்டிங் வரிசையில் மேலே வந்து விளையாடாததும் பெரிய விமர்சனமாக மாறியது. சில இந்திய முன்னாள் வீரர்கள் கொஞ்சம் கடுமையாகவே விமர்சனத்தை முன் வைத்தார்கள். தோனி மேற்கொண்டு சிஎஸ்கே அணிக்கு விளையாட தேவை இல்லை என்று கூறினார்கள்.

தோனி ஒரு நிகழ்ச்சியில் பேட்டி அளிக்கும் பொழுது “நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிய பிறகு எனது குடும்பத்தினர் உடன் கொஞ்சம் நேரம் செலவிட விரும்பினேன். அதே அளவில் என்னை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும், என் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளவும் நான் விவசாயத்தை தேர்ந்தெடுத்தேன். எனக்கு எப்பொழுதும் பைக்குகள் மீதுதான் ஆர்வம். அடுத்து நான் விண்டேஜ் கார்கள் வாங்க ஆரம்பித்தேன். ஏதாவது மன அழுத்தத்தில் இருந்தால் கேரேஜ் உள்ளே சென்று அரை மணி நேரம் செலவிட்டாலே சரியாகிவிடும்.

- Advertisement -

இதையும் படிங்க : கோலி கிடையாது.. நாக் அவுட்ல இந்த வீரர்தான் ஆர்சிபிய தனியா ஜெயிக்க வைக்க போறார் – வாசிம் அக்ரம் கணிப்பு

நான் எப்பொழுதும் செல்லப் பிராணிகளுடன் வளர்வதை விரும்புகிறேன். அது பூனையாக இருந்தாலும் சரி நாயாக இருந்தாலும் சரி. எனக்கு நாய்களையே அதிகம் பிடிக்கும். அவைகள் உங்கள் மீது நிபந்தனையற்ற அன்பை வைத்திருக்கின்றன. நான் ஒரு ஆட்டத்தின் தோற்று விட்டு சென்றாலும் கூட, அது எப்பொழுதும் போல என்னை வரவேற்கிறது அன்பு செலுத்துகிறது” என்று கூறி இருக்கிறார்.