பிறந்தது அங்க தான்.. ஆனா பாகிஸ்தானுக்காக கிரிக்கெட் இதனால ஆடவே மாட்டேன்.. ஜிம்பாப்வே சிக்கந்தர் ராசா பேட்டி

0
1157

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக விளங்கி வரும் சிக்கந்தர் ராசா தற்போது ஐபிஎல் மற்றும் பல பிரான்சிஸ் கிரிக்கெட் லீக் தொடர்களிலும் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் சுவாரசியமான கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.

- Advertisement -

சிக்கந்தர் ராசா ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் விளையாடினாலும் பிறப்பால் அவர் ஒரு பாகிஸ்தான் வீரர். தற்போது 38 வயதாகி வரும் சிக்கந்தர் ராசா 1986ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டில் பிறந்தார். இவர் 2013ஆம் ஆண்டில்தான் ஜிம்பாப்வே அணிக்காக விளையாட அறிமுகமானார். சமீபகாலமாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் மிகச் சிறந்த பங்களிப்பை அணிக்காக அளித்து வரும் சிக்கந்தர்ராசா பல போட்டிகளையும் வென்று கொடுத்திருக்கிறார்.

ஜிம்பாப்வே அணியின் அனுபவம் வாய்ந்த வீரரான இவர், இதுவரை 17 டெஸ்ட் 142 ஒரு நாள் மற்றும் 91 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 1187 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 4154 ரன்கள், டி20 கிரிக்கெட்டில் 2037 ரன்களும் குவித்திருக்கிறார். தற்போது இங்கிலாந்து அணியில் நடைபெற்று வரும் 100 பந்துகள் கொண்ட தொடரில் மான்செஸ்டர் அணிக்காக விளையாடி வரும் சிக்கந்தர் ராசா சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவது குறித்து எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நீங்கள் விளையாடினால் பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் பிரச்சனையை தீர்க்கலாம் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதற்கு பதில் அளித்த சிக்கந்தர் ராசா ” நான் பிறப்பால் ஒரு பாகிஸ்தானி. ஆனால் நான் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் தயாரிப்பு. நான் ஜிம்பாப்வே அணிக்காக மட்டுமே விளையாடுவேன். ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் எனக்காக செலவு செய்த நேரத்திற்கும், பணத்திற்கும், நம்பிக்கைக்கும் நான் அவர்களுக்கு திருப்பி செலுத்த முயற்சிக்கிறேன். நான் என்ன சாதித்தாலும் அவர்கள் எனக்கு செய்வதற்கு என்னால் திருப்பி செலுத்தவே முடியாது” என்று தெரியவில்லை என்று நினைக்கிறேன்.

ஜிம்பாப்வே அணி என்னுடையது நான் முழுமையாக ஜிம்பாப்வே அணிக்கு சொந்தம்” என்று கூறி இருக்கிறார். இந்திய அணி சமீபத்தில் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதில் ஜிம்பாப்வே அணி தோல்வி அடைந்தாலும் சிக்கந்தர் ராசா ஜிம்பாப்வே அணிக்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கினார்.

இதையும் படிங்க:பிசிசிஐ அறிவுரை.. கம்பேக் கொடுக்க தயாராகும் இஷான் கிஷன்.. சாம்சனுக்கு வந்த பிரச்சனை.. வெளியான தகவல்கள்

ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் சிக்கந்தர்ராசா ஒட்டுமொத்தமாக டி20 தொடரில் 248 டி20 போட்டிகளில் விளையாடி 30 அரை சதங்களுடன் 134.24ஸ்ட்ரைக் ரேட்டில் 5104 ரன்கள் குவித்திருக்கிறார். பந்துவீச்சில் 145 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -