இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட மறுத்த இஷான் கிஷான் சம்பள பட்டியலில் நீக்கப்பட்டு அணியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். தற்போது அந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. இஷான் கிசான் அடுத்ததாக உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள நிலையில் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு உள்நாட்டு சீசனில் ஜார்கண்ட் அணிக்காக இஷான் கிஷான் விளையாடுவதற்கு ஒப்புக்கொண்டு இருக்கிறார் என்று தெரிய வருகிறது. மேலும் அவர் ஜார்கண்ட் அணியின் கேப்டனாகவும் வரலாம் என்று தெரிகிறது. அவருடைய இந்த முடிவு அவருடைய வருங்கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாக அமைகிறது.
மேலும் இஷான் கிஷான் இந்த முடிவுக்கு வந்திருப்பதில் அவரது நலம் விரும்பிகளுக்கும் இந்திய கிரிக்கெட் தேர்வாளர்களுக்கும் பங்கு இருக்கிறது. அவர்கள் அவருடைய எதிர்காலம் குறித்து ஆலோசனைக் கூறி புரிய வைத்து இந்த முடிவை எடுக்க வைத்திருக்கிறார்கள்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதன் மூலமாக இஷான் கிஷான் இனி இந்திய அணிக்கும் தேர்வு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி துலீப் ட்ராபி தொடங்க உள்ளது. ஆனால் இதில் இஷான் கிஷான் விளையாட மாட்டார். ஆனால் அடுத்தடுத்து உள்நாட்டு போட்டிகளில் ஜார்க்கண்ட் அணிக்காக சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணிக்கு திரும்ப அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு சஞ்சு சாம்சனால் உருவாகி இருக்கிறது.
தற்போது இந்திய டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணிகளுக்கு இஷான் கிஷான் திரும்ப முடியாது. ரிஷப் பண்ட், கேஎல்.ராகுல் மற்றும் துருவ் ஜுரல் என அங்கு சரியான ஆட்கள் இருக்கிறார்கள். அதே சமயத்தில் இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் வாய்ப்பை வீணடிப்பது இஷான் கிஷானுக்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் தற்போது இந்திய டி20 அணியின் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு விக்கெட் கீப்பர்களும் டாப் ஆர்டரில் விளையாடக்கூடியவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
இதையும் படிங்க:கடந்த போட்டியின் கேம் சேன்ஜர்.. இந்திய ODI தொடரில் விலகிய இலங்கை நட்சத்திர வீரர்.. 6வது சம்பவம்
இதன் மூலம் 15 பேர் கொண்ட அணியில் ருதுராஜ், அபிஷேக் ஷர்மா போன்ற மூன்றாவது மாற்று துவக்க ஆட்டக்காரரை அணியின் சேர்க்க வேண்டியது இல்லை. இந்த இடத்தில் கூடுதல் பந்துவீச்சாளர்களை அணியில் எடுத்துக் கொள்ள முடியும். தற்பொழுது ரிஷப் பண்ட் டாப் ஆர்டரில் இந்திய டி20 அணியில் மூன்றாவது இடத்தில் விளையாடுகிறார். மேலும் சஞ்சு சாம்சன் இடத்தில் வரக்கூடிய இஷான் கிஷானும் டாப் ஆர்டரில் முதல் மூன்று இடங்களில் விளையாடக்கூடியவர். இதன் காரணமாக தற்பொழுது சஞ்சு சாம்சன் இடம் இந்திய டி20 அணியிலும் ஆபத்தில் சிக்கி இருக்கிறது!






