இந்திய அணியில் எனக்கு பிடித்த வீரர் இவர்தான்.. ஆனால் அவரை சுதந்திரமாக விடுவதில்லை – சுரேஷ் ரெய்னா பேச்சு

0
0

​சமீபத்தில் முடிவடைந்த இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு, இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் குறித்து முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மிகவும் பெருமையாகப் பேசி இருக்கிறார்.

​இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ரிஷப் பண்ட், லிமிடெட் ஓவர் போட்டிகளில் தனது இடத்தை இழந்துள்ளார். இருப்பினும் அவரிடம் உள்ள எக்ஸ் ஃபேக்டர் அவரை மீண்டும் வைட் பால் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் ஃபார்முக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

​அவர் மீண்டும் தனது பழைய அதிரடி ஆட்டத்திற்கு திரும்ப வேண்டும் என்றால், தனக்கான சரியான மென்டார் ஒருவரை கண்டுபிடித்து அவர் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற வேண்டும்.

​இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்திய ரெய்னா, ரிஷப் பண்ட் பற்றி பேசும்போது “அவர் கடினமாக உழைத்திருக்கிறார், அவர் எனது ஃபேவரிட் பிளேயர், டெஸ்ட் போட்டிகளில் நிறைய ரன்கள் அடித்து வருகிறார், ஒன்டே கிரிக்கெட்டில் அவர் ஏன் இல்லை என்று தெரியவில்லை, அவர் சில விஷயங்களை புரிந்து கொண்டு மென்டார் ஒருவருடன் நேரம் செலவிட்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் தொடர்ந்து பேசிய சுரேஷ் ரெய்னா “அவருக்குள் ஒரு பிளாக்கேஜ் இருக்கிறது, அவரை ஃப்ரீயாக விட வேண்டும், அவர் இன்னும் நிறைய சாதனைகளை அடைவார், நிச்சயம் அவருக்கான டைம் வரும்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -