எனக்கு பிடித்த ஐந்து சிறந்த இன்னிங்ஸ் இதுதான்.. அதில் சூரியவன்சியும் இருக்கிறார் – ரஜத் படிதார் தேர்வு

0
0

​இந்திய கிரிக்கெட் வீரரும் ஆர்சிபி கேப்டனுமான ரஜத் படிதார், கிரிக்கெட் வரலாற்றில் தான் பார்த்த மிகச்சிறந்த 5 பேட்டிங் இன்னிங்ஸ்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அதில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா மற்றும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரின் சிறப்பான ஆட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

- Advertisement -

​இந்த பட்டியலில் முதலிடத்தில் 2004-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் கவர் டிரைவ் ஆடாமல் அடித்த 241 ரன்களையும், இரண்டாவது இடத்தில் 2022 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி அடித்த 82 ரன்களையும் அவர் தேர்வு செய்துள்ளார்.

​அடுத்து 2014-15 ஆஸ்திரேலிய தொடரில் கோலி குவித்த 692 ரன்கள் மற்றும் 2014 ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக சுரேஷ் ரெய்னா 25 பந்துகளில் விளாசிய 87 ரன்கள் ஆகியவற்றை முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களில் வைத்துள்ளார்.

- Advertisement -

​ஐபிஎல் தொடரில் இரண்டு சதங்கள் அடித்து அசத்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ஐந்தாவது இடமாகத் தேர்வு செய்த ரஜத் படிதார் “அவர் உண்மையிலேயே ஒரு விதிவிலக்கான திறமைசாலி, எந்தவொரு உலகத் தரம் வாய்ந்த பவுலராக இருந்தாலும் அவர்களுக்குப் பிரஷர் கொடுத்து ஆதிக்கம் செலுத்துகிறார்” என்று பாராட்டி இருக்கிறார்.

​தொடர்ந்து பேசிய அவர் “சில சமயங்களில் பவுலர்கள் இவருக்கு எங்கு பந்துவீசுவது என்றே தெரியாமல் தணறுவதை நான் பார்த்திருக்கிறேன், இந்த சிறிய வயதிலேயே ஐபிஎல் தொடரில் அவர் காட்டிய ஆதிக்கம் மிகவும் அசாத்தியமானது” என்று கூறி முடித்துள்ளார்.

- Advertisement -