408 ரன்கள் …. வரலாற்று சாதனை படைத்த ஜிம்பாப்வே அணி .. உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியில் ருத்ர தாண்டவம்!

0
21259

2023 ஆம் ஆண்டின் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வைத்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது . இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் எட்டு அணிகள் தரவரிசை பட்டியலில் தகுதி பெற்றுள்ள நிலையில் மீதி இருக்கும் இரண்டு இடங்களை நிரப்புவதற்கான உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஜிம்பாப்வே நாட்டில் வைத்து நடைபெற்று வருகிறது.

பத்து அணிகள் பங்கு பங்கு பெறும் இந்த உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டியில் முதல் சுற்று முடிவடைந்த நிலையில் ஆறு அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர் 6 இருக்கானா போட்டிகள் இன்று நடைபெற்று வருகின்றன . இதில் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின .

- Advertisement -

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது .

அந்த அணியின் விக்கெட் கீப்பர் துவக்க பேட்ஸ்மேன் ஜாய்லார்ட் கம்பி 78 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சியான் வில்லியம்ஸ் மிகச் சிறப்பாக ஆடி சதம் எடுத்தார் . இவர் இந்த தொடரின் முதல் போட்டியிலும் சதம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனைத் தொடர்ந்து அணியின் அதிரடி வீரர்களான சிக்கந்தர் ராசா மற்றும் ரியான் பர்ள் இருவரும் அதிரடியாக ஆட அந்த அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஒரு முனையில் கேப்டன் நின்று ஆட மறுமுனையில் சிக்கந்தர் ராசா அதிரடியாக ஆடினார் . அவர் 27 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 48 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார் .

இவரைத் தொடர்ந்து களத்திற்கு வந்த ரியான் பல் பர்ள் நான்கு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பௌண்டரிகளுடன் 16 பந்துகளில் 47 ரன்களை விளாசி மூன்று நாட்களில் தனது அரை சதத்தை தவறவிட்டு ஆட்டம் இழந்தார் . ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நின்று அதிரடியாக ஆடிய கேப்டன் சியான் வில்லியம்ஸ் மிகச் சிறப்பாக ஆடி 101 பந்துகளில் 174 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார் . இதில் 21 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும் .

- Advertisement -

200 ரன்களுக்கு மேல் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 174 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டம் இழந்தார் வில்லியம்ஸ். இவரைத் தொடர்ந்து ஆட வந்த மறுமணி அதிரடியாக ஆடி 6 பந்துகளில் 18 ரன்கள் குவித்து ஆட்டம் விளக்காமல் இருந்தார் . இதன் காரணமாக ஜிம்பாப்வே அணி 50 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து408 ரண்களை குவித்தது . இது ஒரு நாள் போட்டிகளில் அந்த அணி குவிக்கும் அதிகபட்ச ஸ்கோர் ஆகும் .

ஜிம்பாப்வே இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டு கென்யா அணிக்கு எதிராக 351 ரண்களை எடுத்து இருந்தது அந்த அணியின் சிறந்த ஒருநாள் ஸ்கோர் ஆக இருந்தது . இன்றைய போட்டியில் அதனை முறியடித்ததோடு மட்டுமல்லாமல் ஒரு நாள் போட்டிகளில் 400 ரன்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது . இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் நான் ஒரு ரண்களைக் கடந்த அணிகளின் பட்டியலில் ஜிம்பாப்வே அணியும் தனது பெயரை பதிவு செய்தது . ஒரு நாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் அதிகபட்சமாக ஆறு முறை 400 ரன்கள் கடந்து இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்து அணி ஐந்து முறை 400 வருடங்களை கடந்து இருக்கிறது . ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இரண்டு முறை 400 ரன்கள் கடந்து இருக்கின்றன . நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் ஒரு முறை 400 ரண்களை கடந்திருக்கிறது